விண்டோஸ் 8 சிஸ்டம் பயன்படுத்திக் கொண்டிருந்தவர்கள் தற்போது விண்டோஸ் 8.1 தொகுப்பிற்கு மாறியுள்ளனர்.
இந்த தொகுப்பில் பல வழிகளில் சிஸ்டமை ஷட் டவுண் செய்யலாம்.
1. விண்டோஸ் ஷட் டவுண்ட் செய்வதற்கான எளிய வழி, Start பட்டனைப் பயன்படுத்துவது தான்.
ஸ்டார்ட் பட்டனில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் பாப் அப் மெனுவில், பல கட்டளைகளும், செயல்பாட்டு வசதிகளும் பட்டியலிடப்படும். இங்கு Shut down அல்லது sign out செய்திடலாம்.
தொடர்ந்து ஒரு சப் மெனு கிடைக்கும். இதில் Sign out, Sleep, Shut down, மற்றும் Restart ஆகிய ஆப்ஷன்கள் கிடைக்கும். Shut down என்பதில் கிளிக் செய்தால், சிஸ்டம் பவர் ஆப் ஆகும்.
2. இவற்றுடன், ஏற்கனவே விண்டோஸ் 8 சிஸ்டத்தில் தந்த வழிகளையும் கையாளலாம். இதில் Charms Bar இயக்கவும். கிடைக்கும் திரையில், Settings தேர்ந்தெடுத்து, பின்னர் அதில் உள்ள Power ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்.
இதில் மூன்று ஆப்ஷன்கள், Sleep, Shut down, மற்றும் Restart, கிடைக்கும். இதில் Shut down என்பதில் கிளிக் செய்திட, சிஸ்டம் மூடப்படும்.
3. நீங்கள் டெஸ்க்டாப் திரையில் இருந்தால், Alt+ F4 4 கீகளை ஒரு சேர அழுத்தினால், Shut down விண்டோ கிடைக்கும். இதில் உள்ள கீழ் விரி மெனுவினைத் திறக்கவும்.
இங்கு Switch user, Sign out, Sleep, Shut down, மற்றும் Restart என்ற ஆப்ஷன்களைப் பார்க்கலாம். இங்கேயும், Shut down என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, சிஸ்டத்தை முழுமையாக மூடலாம்.
4. அடுத்த வழி, Login திரையில் கிடைக்கும். Start Screen-ல், மேல் வலது மூலையில், உங்கள் அக்கவுண்ட் போட்டோவில் கிளிக் செய்திடவும்.
உங்கள் மவுஸைக் கிளிக் செய்திடுங்கள் அல்லது ஏதேனும் ஒரு கீயை அழுத்தி, Lock Screen-னை விட்டு நகரவும். லாக் இன் ஸ்கிரீனில், கீழ் வலது மூலையில் உள்ள ஷட் டவுண் பட்டனில் கிளிக் செய்து வெளியேறலாம்.