ஆசிரியர்கள், மாணவர்கள் மாற்று வாசகர்களின் நலன்கருதி புதிய அம்சங்கலுடன் புதிய இணையத்தளமானது விரைவில் வெளியிடப்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். "உங்களுடைய அடைவுக்காக எப்பொழுதும் நாங்கள் "

படங்களின் தரம் குறையாமல் அளவைக் குறைக்கலாம்!

JPEGminiவிதவிதமான ஸ்மார்ட்போன்கள், ஹைடெக் கேமராக்கள் என தொழில்நுட்பம் வரிந்துகட்டி நமக்கு வசதிகளை தந்துகொண்டிருந்தாலும்  அவற்றின் மூலமாக எடுக்கும் படங்களின் சைஸ் மட்டும் அதிகமாகவேதான் இருக்கிறது. படம் எடுக்கும்போதே சைஸைக் குறைக்கும் ஆப்ஸன்கள் இருந்தாலும், பெரும்பாலும் அதைப் பயன்படுத்துவதில்லை. இதனால் புகைப்படங்களை கணினியில் சேமிப்பது, இணையத்தில் பகிர்வது என எல்லா இடங்களிலும் இடப்பிரச்னை எழுந்து சிக்கலாகிறது.
உதாரணமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வலைதளத்தை (www.tnpsc.gov.in) சொல்லலாம். இதில் ஒருவர் ஆன்லைன் மூலமாக வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது, அவரது புகைப்படத்தை பதிவுசெய்ய வேண்டும். அவர்கள் முன்கூட்டியே வரையறை செய்துள்ள (20kb &- 50kb) அளவுக்குள் உள்ள புகைப்படத்தையே அங்கு பதிவு செய்ய முடியும். அதைவிட அளவு அதிகமாகவோ, குறைவாகவோ பதிவு செய்யப்படும் புகைப்படத்தை அவ்வலைதளம் ஏற்றுக்கொள்ளாது.
இப்படி இன்னும் பல இடங்களில் அதிக சைஸ் கொண்ட புகைப்படங்களால் ஏற்படும் சிக்கல்கள் ஏராளம். பலருக்கும் தலைவலியாக இருக்கிற இந்த விவகாரத்தில் தீர்வுதான் என்ன?………
இப்பிரச்னைக்குத் தீர்வாகச் செயல்படுகிறது, www.jpegmini.com வலைதளம்! இதில் புகைப்படத்தின் சைஸ், அதன் தரம் கொஞ்சமும் குறையாமல் 20 – 80 சதவீதம் வரை குறைக்க முடியும். இதில் கவனிக்க வேண்டிய அம்சம்… JPEG format என்கிற வகையில் வரும் புகைப்படங்களின் சைஸை மட்டுமே இங்கு குறைக்க முடியும்.
இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை…
* www.jpegmini.com வலைதளம் செல்லவும்.
* உதாரணமாக, கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தின்  சைஸானது 574kb.. இதைக் குறைப்பதற்கு, வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி புகைப்படத்தின் கீழே உள்ள ‘Try It Now’ ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
* அங்கே தோன்றும் புகைப்படத்துக்கான காலியிடத்தின் மையத்தில் உள்ள ‘Press to Upload Photos’ என்பதை க்ளிக் செய்து, அளவைக் குறைக்க வேண்டிய ஃபைலை தேர்வுசெய்து, Upload செய்யவும்.
* சிறிது நேரத்துக்குள் நாம் தேர்வு செய்த புகைப்படம், சைஸ் குறைந்து காணப்படும். அப்போது அந்தப் புகைப்படத்தின் கீழ்பகுதியில்… அதன் பழைய சைஸ் (574kb), புதிய சைஸ் (308kb), குறைக்கப்பட்ட அளவு போன்ற தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
* பிறகு, அந்தப் புகைப்படத்தின் கீழே உள்ள ‘டவுன்லோடு’ ஆப்ஷனை கிளிக் செய்து, சைஸ் குறைக்கப்பட்ட நம் புகைப்படத்தை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
குறிப்பு:  ஒவ்வொரு படமாக சைஸ் குறைக்க விரும்புபவர்கள் இந்தத் தளத்தில் Sign Up  செய்யத் தேவை இல்லை. ஒரே நேரத்தில் பல படங்களை சைஸ் குறைக்க விரும்புபவர்கள், இந்த தளத்தில் இலவசமாக Sign Up  செய்துகொண்டு, நிறைய படங்களை Upload செய்து சைஸ் குறைத்துக்கொள்ளலாம். இனி புகைப்படத்தின் அளவை குறைக்க கணிணியோடு மவுஸ் போராட்டம் நடத்த தேவையில்லை.