ஆசிரியர்கள், மாணவர்கள் மாற்று வாசகர்களின் நலன்கருதி புதிய அம்சங்கலுடன் புதிய இணையத்தளமானது விரைவில் வெளியிடப்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். "உங்களுடைய அடைவுக்காக எப்பொழுதும் நாங்கள் "

மனிதர்களின் நேரத்தை திருடும் டிவி, கம்யூட்டர், மொபைல்போன்: ஆய்வில் தகவல்!

78631014மனிதர்களின் நேரத்தை கம்யூட்டர், டிவி, மொபைல்போன்கள் போன்ற இயந்திரங்கள் திருடிக்கொள்கின்றன என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மக்கள் தூங்குவதை விட அதிகமான நேரத்தை டிவி பார்ப்பதற்கும், மொபைல் போனிலும்தான் செலவிடுகின்றனராம். இதுகுறித்து ஆப்காம் என்ற நிறுவனம் இங்கிலாந்தில் உள்ள 2000 பேரிடமும், 800 குழந்தைகளிடமும் ஆய்வு மேற்கொண்டது.
இங்கிலாந்து மக்கள் பொதுவாக அதிக நேரத்தை டிவி, மொபைல், டேப்லட் ஆகியவற்றில் கழிக்கின்றனராம். இங்கிலாந்து வாசிகளில் 61 சதவீத மக்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர். மேலும் டேப்லட், கம்ப்யூட்டர் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு உயர்ந்துள்ளது.
சாதாரணமாக, ஒரு இங்கிலாந்து சிறுவன் இது போன்ற நடவடிக்கைகளில் 11 மணி நேரம் 7 நிமிடத்தை கழிக்கிறான். கடந்த 2010ல் ஆய்வு செய்த போது இது 8 மணிநேரம் 48 நிமிடங்களாக இருந்தது. தற்போது இது அதிகரித்துள்ளது. நவீன தொழில்நுட்ப யுகம் மக்களுக்கு பல்வேறு வசதிகளை கொண்டு வந்து சேர்த்த போதிலும் மக்களின் தனிப்பட்ட நேரத்தை அதிகமாக அது திருடிக் கொண்டுள்ளது தெரிகிறது.
பணி நேரத்திற்கு பிறகும் தங்களது வேலை தொடர்பான நடவடிக்கைகளில் 60 சதவீதம் பேர் ஈடுபடுகின்றனர். 10 சதவீதம் பேர் படுக்கையில் படுத்தபடியே மொபைலில் படிப்பது, வேலை தொடர்பான மெயில்களை பார்வையிடுவது, அனுப்புவது என ஈடுபடுகின்றனர். இதனால் ஒருவர் சுமார் 8 மணிநேரம் 41 நிமிடம் தூங்குகிறார் என்றால், அதை விட அதிகமாக 11 மணிநேரத்திற்கும் மேலாக டிவி, மொபைல், கம்ப்யூட்டர் இவற்றோடு செலவிடுகின்றனர்.