1. வாட்ஸ்அப் (WhatsApp)
மிகப்
பிரபலமான மெசேஜிங் அப்ளிகேஷன்களில் ஒன்று இது. ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ்,
விண்டோஸ் போன்களில் இயங்க கூடியது. இந்த அப்ளிகேஷன் 3G, Wifi கனெக்சனைப்
பயன்படுத்தி உங்கள் நண்பர்கள், வீட்டு நபர்களுக்கு தகவல் அனுப்ப அல்லது பேச
பயன்படுகிறது. இவை கூடுதல் எதுவும் கட்டணம் இல்லாமல் செயல்படுவதால்
அனைத்து ஸ்மார்ட் போன் பயனர்களும் இதை விரும்புகின்றனர்.
வாட்ஸ் அப்ளிகேஷன் மூலம் pictures, audio notes மற்றும் வீடியோ மெசேஜ்களை அனுப்ப முடியும்.
2. வைபர் (Viber)
இந்த
வைபர் அப்ளிகேஷனும் மிக பிரபலமான மேசேஜிங் அப்ளிகேஷன்தான். இதில் வீடியோ
மேசேஜ், அழைப்புகளை மேற்கொள்ள, டெக்ஸ்ட் மேசேஜ் அனுப்ப முடியும். இவை
அனைத்தையும் 3G, wifi மூலம் செய்ய முடியும். இந்த அப்ளிகேஷன் உலகளவில் 200
மில்லயனுக்கும் அதிகமான பயனர்கள் தங்களது ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ், விண்டோஸ்
போன்களில் பயன்படுத்துகின்றனர்.
வைபர் மெசேஜிங் அப்ளிகேஷன்: ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு | ஐஓஎஸ் பயனர்களுக்கு | விண்டோஸ்போன் பயனர்களுக்கு
3. ஸ்கைப் (Skype)
அந்த
அப்ளிகேஷனைப்பற்றி சொல்லவே தேவையில்லை. பெரும்பாலான நண்பர்கள் இதைப்
பயன்படுத்திக்கொண்டுள்ளனர. இது டெஸ்க்டாப் மற்றும் விண்டோஸ்போன்,
ஆண்ட்ராய்ட் போன்ற மொபைல் ப்ளாட்பார்ம்களில் பயன்படுத்தப்படுகிறது. 663
மில்லியன் பயனர்கள் இப்பொழுது இந்த அப்ளிகேஷனைப்
பயன்படுத்திக்கொண்டுள்ளனர்.
ஸ்கைப் மெசேஜிங் அப்ளிகேஷன்: ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு | ஐஓஎஸ் பயனர்களுக்கு | விண்டோஸ்போன் பயனர்களுக்கு
4. லைன் (Line)
மற்றுமொரு
பிரபலமான மெசேஜிங் அப்ளிகேஷன் இது. உலகளிவில் 250 மில்லியன் பயனர்களைக்
கொண்டுள்ளது. இந்த அப்ளிகேஷன் மூலமும் free messages, free voice calls
ஆகியவற்றைச் செய்ய முடியும். இருநூற்றி முப்பத்தொரு நாடுகளில் இந்த
அப்ளிகேஷன் பயன்பாட்டில் உள்ளது.
5. பேஸ்புக் மெசன்ஜர் (Facebook Messenger)
பேஜ்புக்
மேனேஜர் மூலம் டெக்ஸ்ட் மெசேஜ்களை அனுப்பலாம். இதன் மூலம் photos,
stickers, smileys போன்றவற்றையும் அனுப்ப முடியும். விண்டோஸ்போன்களுக்கு
இந்த அப்ளிகேஷன் தற்போது இல்லையென்றாலும், விண்டோஸ் டெஸ்க்டாப்பில்
பயன்படுத்த முடியும்.
பேஸ்புக் மெசேஜிங் அப்ளிகேஷன்: ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு | ஐஓஎஸ் பயனர்களுக்கு | விண்டோஸ்போன் பயனர்களுக்கு
இவை அனைத்தும் கூகிள் ப்ளேஸ்டோரில் கிடைக்கும்.
நன்றி.