அவற்றை இலவசமாக பயன்படுத்த நாம் இணையத்தில் crack file களை தேடி அலைகின்றோம் அப்படி தேடும்போது அதில் சில வைரஸ் மற்றும் மால்வேர் programmerகளிடம் சிக்கிவிடுகிறோம். crack fileலே இல்லாமல் அந்த மென்பொருளை எப்படி இலவசமாக பயன்படுத்துவது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
நமது இந்த தேவையை ஒரு software நிவர்த்தி செய்கிறது. அந்த software பெயர் RunAsDate.
செயல் முறை:-
- இந்த software நமது சோதனைப்பதிப்பு (trial version) softwareஇன் install செய்த நேரத்தையும், தேதியையும் உறையவைக்கிறது.
- இதன் மூலம் நாம் ஒரு சோதனைப்பதிப்பு (trial version) softwareஐ எந்த crackகும் பயன்படுத்தாமல் இலவசமாக பயன்படுத்தலாம்.
- இதில் காலாவரையான மென்பொருளை (software) பயன்படுத்த வேண்டாம்.
- அந்த மென்பொருள் (software) கொடுக்கும் நாட்களுக்குள் இதை பயன்படுத்த வேண்டும்.
1. முதலில் Browse பொத்தானை அலுத்தி நீங்கள் பயன்படுத்த வேண்டிய மென்பொருளை எந்த ட்ரைவில் install செய்து வைத்துள்ளீர்களோ அந்த பகுதிக்கு சென்று அதன் ஒரிஜினல் exe ஐக்கானை தேர்வு செய்யவும்.
2. பிறகு தாங்கள் இன்ஸ்டால் செய்த அல்லது அந்த மென்பொருள் காலாவதி ஆகவில்லை என்றால் அன்றைய தேதி மற்றும் நேரத்தை குறிப்பிடவும்.
3. பிறகு Run பொத்தானை அலுத்தி நீங்கள் தேர்ந்தெடுத்த exe ஐகான் சரியானதா என சரிபார்த்துக்கொள்ளவும்.
4. பிறகு Create Desktop Shortcut => என்ற பொத்தானுக்கு அருகில் உள்ள கட்டத்தில் அந்த மென்பொருளின் பெயரை அல்லது உங்களுக்கு பிடித்த பெயரை பெயரை கொடுக்கவும்.
5. பிறகு Create Desktop Shortcut => என்ற பொத்தானை அலுத்தி desktopல் அந்த மென்பொருள்க்கான Shortcutஐ உருவாக்கவும். பிறகு Close பன்னவும்.
6. பிறகு நீங்கள் Desktopல் உருவாக்கிய Shortcut மூலம்தான் அந்த மென்பொருளை திறந்து பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் நீங்கள் கொடுத்த அந்த நேரத்திலேயே நீண்டநாள் பயன்படுத்தலாம்.
7. இனி யாரும் சோதனைப்பதிப்பு (trial version) software க்கு crack file தேடி அலையவேண்டாம். அவ்வளவுதான்.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவவும்
நன்றி:-