இதற்கு காரணம் உங்கள் Folder/ File கணினியில் இயங்கி கொண்டிருப்பதே ஆகும். நாம் அவற்றை க்ளோஸ் செய்து இருந்த போதிலும், இந்த பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது. பின்னணியில் அவை இயங்குவது காரணமாய் இருக்கலாம்.
படத்தில் உள்ளது போலத் தான் பெரும்பாலும் வரும். இது மாதிரி வரும் போது அவற்றை எப்படி டெலீட் செய்வது?
இதற்கு உதவும் மென்பொருள் தான் “Unlocker”. இது டெலீட் மட்டும் இன்றி இன்னும் Rename, Move போன்ற வசதிகளை செய்யும். இதன் மூலம் பின்னணியில் இயங்கி கொண்டிருக்கும் File/Folder – இன் இயக்கத்தை நிறுத்தி அவற்றை Delete செய்ய இயலும்.
இதை இப்போது உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
எதை Delete செய்ய முடியவில்லையோ, அந்த File/Folder மீது Right Click செய்து “Unlocker” என்பதை கிளிக் செய்யவும்.
இப்போது மேலே உள்ளது போல வரும் புதிய விண்டோ ஒன்றில் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கும், அதில் “Kill Process” என்று கொடுத்தால் இயங்கி கொண்டிருக்கும் அதன் செயல் நின்று விடும், இதன் மூலம் நீங்கள் Delete செய்து விட முடியும். இல்லை என்றால் “Unlock All” என்பதை தெரிவு செய்து கூட பின்னர் Delete செய்ய முடியும்.
இதே, அந்த File/Folder எங்கேயும் இயங்கவில்லை என்றால் கீழே உள்ளது போல ஒரு சின்ன விண்டோ வரும், அதில் Delete என்பதை தெரிவு செய்தால் போதும்.
இப்போது சில வினாடிகளில் அந்த File/Folder Delete ஆகி விடும். பிரச்சினை முடிந்தது.