ஆசிரியர்கள், மாணவர்கள் மாற்று வாசகர்களின் நலன்கருதி புதிய அம்சங்கலுடன் புதிய இணையத்தளமானது விரைவில் வெளியிடப்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். "உங்களுடைய அடைவுக்காக எப்பொழுதும் நாங்கள் "

Manager – சிறு நிறுவனங்களுக்கான இலவச Accounting மென்பொருள்

manager-free-accounting-software-3
சிறிய நிறுவனங்களை வைத்திருப்பவர்கள் வரவு செலவுக் கணக்குகளை நோட்டுகளில் எழுதி அல்லது Excel மென்பொருளில் ஏற்றி சரிபார்த்து வருவார்கள். இல்லையெனில் அக்கவுண்டிங் மென்பொருளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும். அப்படியே வாங்கினாலும் மென்பொருளை Accounts தெரியாதவர்களுக்கு எளிமையாக புரிந்து விடாது. எளிமையாகவும் இலவசமாகவும் அக்கவுண்ட்ஸ் மென்பொருள் கிடைத்தால் நன்றாக இருக்குமல்லவா?

அது தான் 

Manager
 என்ற இலவச மென்பொருள். இது சாதாரண நபர்களும் எளிமையாக உபயோகிக்கும் படி இந்த மென்பொருள் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த மென்பொருளின் மூலம் நிறுவனத்தின் வரவு செலவு (income and 
expense
), சொத்துகள், கடன்கள், பொருள் விற்பனை, வரி பிடித்தம் போன்றவற்றை எளிதாக தெரிந்து கொள்ளலாம். இவற்றை Summary பக்கத்தில் எல்லாமே தொகுத்து ஒரே இடத்தில் காணலாம். மேலும் Balance Sheet, Profit and Loss, Ledger Summary போன்றவை புரியும் படி அறியலாம்.
 manager-free-accounting-software-2


Bank Accounts
, Cash Accounts தனியாக கையாளவும் அதிலிருந்தே பணம் வரவினை Receive Moneyகொடுத்து ஏற்றலாம். பணம் பிறருக்கு கொடுப்பதினை Spend Money இலும் வங்கியிலிருந்து பணம் எடுப்பதினை Transfer Money இலும் ஏற்றலாம். மற்ற மென்பொருள்களிலுள்ள Payment, Receipt போன்ற குழப்பங்கள் இதில் கிடையாது.  
manager-free-accounting-software-1

Also Read:

மேலும் இதில் 
Sales Quotes, Sales InvoicesPurchase Orders, Purchase Invoices, Suppliers and Customersmanagement போன்றவையும் இருக்கின்றன.  இதனை தனி நபர்களும் வரவு செலவுக் கணக்கறிய பயன்படுத்தலாம். Accounts தெரியாத எனக்கு இந்த மென்பொருள் நிறைய விசயங்களை எளிமையாக கற்றுக் கொள்ள உதவுகிறது.