ஆசிரியர்கள், மாணவர்கள் மாற்று வாசகர்களின் நலன்கருதி புதிய அம்சங்கலுடன் புதிய இணையத்தளமானது விரைவில் வெளியிடப்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். "உங்களுடைய அடைவுக்காக எப்பொழுதும் நாங்கள் "

Notepad ஐப் பயன்படுத்தி Folder ஐ Lock செய்யலாம்!!



முதலில் ஒரு Nodepad ஐ திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்.ren tamil tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}

பின் அந்த Notepad ஐ lock.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.பின் இன்னொரு Notepad ஐ த் திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும் ren tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} tamil பின் அந்த Notepad ஐ key.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.

இங்கு tamil என்பது நீங்கள் Lock செய்ய வேண்டிய Folder இன் பெயர் ஆகும். இனி
குறிப்பிட்ட அந்த tamil என்ற போல்டெர் ஐ Lock செய்வதற்கு lock.bat என்ற file ஐ double click செய்தல் வேண்டும்.

 Lock செய்த Folder ஐ மீண்டும் Unlock செய்வதற்கு key.bat என்ற File ஐ double click செய்தல் வேண்டும்.

நீங்கள் folder ஐ Lock செய்யும் போது Lock செய்யும் Folder ம் lock.bat என்ற fileம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.அதே போல Unlock செய்யும் போது unlock செய்யும் Folderம் key.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.

அந்த key.bat என்ற வேறொரு Drive இல் சேமித்து விடுங்கள். அந்த File இல்லாமல் உங்கள் folder ஐ யாரும் திறக்க முடியாது .