ஆசிரியர்கள், மாணவர்கள் மாற்று வாசகர்களின் நலன்கருதி புதிய அம்சங்கலுடன் புதிய இணையத்தளமானது விரைவில் வெளியிடப்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். "உங்களுடைய அடைவுக்காக எப்பொழுதும் நாங்கள் "

Registry Editor-யை ஒப்பன் ஆகாமல் தடுக்க


விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தின் அனைத்து கட்டளை தொகுப்புகளும் Registry Editor-ல் மட்டுமே இருக்கும். இந்த விண்டோஸ் Registry Editor யை முறையாக கையாளமல், தவறாக பயன்படுத்தினோம் ஆனால் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டமே முடக்கப்பட்டுவிடும். மேலும் இதனால் மீண்டும் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டமே நிறுவவேண்டி வரும், எனவே தான் விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியை எடிட் செய்யும் போது கவனத்துடன் செயல்பட வேண்டும். இல்லையெனில் விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியில் பணியாற்றும் முன்னரே விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியை நகல்(Backup) எடுத்துக்கொள்ள வேண்டும்.
 
கணினியை ஒரு பயனாளர் மட்டும் பயன்படுத்தினால் பராயில்லை, நண்பர்கள், உறவினர்கள் பயன்படுத்தினால்தான் பிரச்சினை அவர்கள் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியில் புகுந்து மாற்றங்களை செய்து விடுவார்கள். பின் கணினியானது எதாவது பாதிப்பிற்கு உள்ளாகும் இல்லையெனில் முடக்கப்பட்டுவிடும். அவர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியாமல், அந்த பிரச்சினையை சரிசெய்ய முடியாமல் கடைசியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை மீண்டும் கணினியில் நிறுவ வேண்டும். இதுபோன்ற சிக்கல்களை சமாளிக்க வேண்டுமெனில் நாம் முதலிலேயே ரிஸிஸ்ட்டரியை பாதுகாத்து கொள்வது நல்லது. இதற்கு இரண்டுவழிதான் உள்ளது. ஒன்று ரிஸிஸ்ட்டரியை நகல்(Backup) எடுத்து தனியே வைக்க வேண்டும். இல்லையெனில் ரிஸிஸ்ட்டரியை டிசேபிள் செய்ய வேண்டும். விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியை எவ்வாறு டிசேபிள் செய்வது என்று கீழே காண்போம்.

முதலில் ரன் விண்டோவினை ஒப்பன் செய்யவும், ஒப்பன் செய்ய Ctrl+R கீகளை ஒருசேர அழுத்தி ஒப்பன் செய்யலாம். இல்லையெனில் Start > Run என்பதை தேர்வு செய்து ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில்gpedit.msc என்று டைப் செய்து ஒகே செய்யவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் User Configuration > Administrative Templates > System என்னும் வரிசையை தெரிவு செய்யவும்.


System என்னும் தேர்வினை தெரிவு செய்யவும். வலதுபுறமாக தோன்றும் வரிசையில் Prevent access to registry editing tools என்பதை இரட்டை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Enabled என்னும் ஆப்ஷன் பட்டனை தேர்வு செய்து ஒகே செய்யவும்.


அவ்வளவுதான் இப்போது விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியானது டிசேபிள் செய்யப்பட்டிருக்கும். இப்போது விண்டோஸ் ரிஸிட்டரியை ஒப்பன் செய்து போது எரர் செய்தி மட்டுமே தோன்றும்.


இதனை மீண்டும் எனேபிள் செய்ய மேலே சொன்ன வழிமுறையை பின்பற்றி Not Configured என்னும் ஆப்ஷன் பட்டனை தேர்வு செய்து கொள்ளவும். விண்டோஸ் ரிஸிட்டரியை காப்பாற்ற இதுவும் ஒரு வழிமுறை ஆகும்.