ஒரு சில தேவையில்லாத மென்பொருளை நீக்கினால் கூட, அம் மென்பொருள் தொடர்புடைய ஒரு சில கோப்புகள் கணினியை விட்டு அகலாது. அந்த மென்பொருளின் ஒரு சில கோப்புகள் கணினியில் உள்ள ரெஜிஸ்ரியில் (Registry) தங்கிவிடும். இதுபோன்று அகலாமல் இருக்கும் கணினியின் ஹார்ட் டிஸ்கிலேயே இருக்கும் கோப்புகள் சில நேரங்களில் பிழைச் செய்திகளைக் காட்டும்.
பொதுவாக ஒரு மென்பொருளை கணினியில் நிறுவம்பொழுது (software instalation on computer) அவைகள் செக்டர்களாக பிரிக்கப்பட்டு வன்தட்டில் சேமிக்கப்படும். தேவையில்லாத மென்பொருளை நீக்கும்பொழுது குறிப்பிட்ட செக்டரில் உள்ள கோப்புகள் மட்டும் அழியும். முன் குறிப்பிட்ட ஒரு சில கோப்புகள் மட்டும் அழியாமல் அந்த இடத்தை அடைத்துக்கொண்டிருக்கும்.
இவ்வாறான சூழலில் வேறொரு புதிய மென்பொருளை கணினியில் நிறுவும்பொழுது, குறிப்பிட்ட இடத்தை அது எடுத்துக்கொள்ளும். எடுக்கும் இடத்தின் அளவு மென்பொருளின் அளவிற்கு குறைவாக இருக்குமாயின், அருகில் உள்ள காலியான செக்டர்களில் (Empty sectors) அத்தகவல்கள் பதியப்படும். இத்தகைய காரணங்களால் கணினி தொடங்குவதில் தாமதம் ஏற்படும்...
அதுமட்டுமில்லாமல் குறிப்பிட்ட மென்பொருள்களின் அழியாமல் இருக்கும் கோப்புகள் அங்கேயே தங்கியிருப்பதால் அத்தகைய கோப்புகள் எரர் செய்திகளைக் காட்டும்.
இத்தகைய பிரச்னைகளை சரிசெய்ய ஒரு அருமையான இலவச மென்பொருள் உண்டு.
மென்பொருளின் பெயர்: CheckDiskGUI 1.19
விண்டோஸ் 8, விண்டோஸ் 7, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸஃ எக்ஸ்பி என அனைத்து விண்டோஸ் இயங்குதளத்தில் இம்மென்பொருள் சிறப்பாக இயங்க கூடியது.
மென்பொருளைப் பயன்படுத்தும் விதம்: (How to use this software)
மென்பொருளைத் தரவிறக்கம் செய்து எந்த டிஸ்க் டிரைவில் பிரச்னையோ அதைத் தேர்ந்தெடுக்கவும். பிறகு Fix and Recover என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் பிரச்னைக்குரிய Hard disk சரிசெய்யப்படும். (உதாரணத்திற்கு மேலுள்ள படத்தைப் பார்க்கவும்.)
The CheckDiskGUI application was developed to be a Graphical User Interface for the commandline utility CHKDSK. It can display the file system integrity status of hard disks and floppy disk and can fix logical file system errors. It is similar to the fsck command in Unix operating systems that displays the file system integrity status for hard disks and floppy disk and can fix logical file system errors.
CHKDSK can also check the disk surface for physical errors or bad sectors, a task previously done by SCANDISK This version of CHKDSK can also handle some physical errors and recover data that is still readable.
CheckDiskGUI is created for those people who don't like the complex commandline parameters.
Features:
Check disk for errors
Fixed disk errors
Recover data form bad sectors
Print results
Remove a scheduled CheckDisk
1.19 MB அளவுள்ள இந்த மென்பொருளைத் தரவிறக்கம் செய்யச் சுட்டி: : Download CheckDiskGUI