யூடியூப் வீடியோக்களை சுத்தமாக்கி தருவதாக இந்த இணையதளம் சொல்கிறது. அதாவது யூடியூபின் வீடியோ தொடர்பான விளம்பரங்கள் மற்றும் பக்கவாட்டில் தோன்றக்கூடிய தொடர்புடைய வீடியோ பரிந்துரை மற்றும் பின்னூட்டங்கள் போன்ற இடையூறுகள் இல்லாமல் தேர்வு செய்த விடியோவை மட்டும் பார்க்கலாம். இதற்காக பார்க்க விரும்பும் யூடியூப் வீடியோ இணைப்பை மட்டும் இந்த தளத்தில் சமர்பித்தால் போதும் விளம்பரம் போன்றவற்றை நீக்கி சுத்தமாக்கி விடுகிறது.
வழக்கமான யூடியூப்பில் பார்ப்பதற்கும் வியுபியூர் சேவையில் பார்ப்பதற்கும் என்ன வித்தியாசம் என்பதை முகப்பு பக்கத்திலேயே காட்சி வீடியோவாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த சேவைக்கான புக்மார்கிங் வசதியும் உள்ளது. அதன் மூலம் நேரடியாக யூடியூப் தளத்திலேயே இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
வீடியோ பிரியர்களுக்கு சரியான சேவை இது. ஆனால் சில வீடியோக்களில் இந்த தூய்மை படுத்தலையும் மீறி விளம்பரங்கள் எட்டிப்பார்க்கலாம். அவற்றை பொறுத்துக்கொள்வதைவிட வேறு வழியில்லை. பயன்படுத்தி பார்த்து சொல்லுங்கள்.
இணைய முகவரி: http://viewpure.com/






