ஆசிரியர்கள், மாணவர்கள் மாற்று வாசகர்களின் நலன்கருதி புதிய அம்சங்கலுடன் புதிய இணையத்தளமானது விரைவில் வெளியிடப்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். "உங்களுடைய அடைவுக்காக எப்பொழுதும் நாங்கள் "

நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து முதுகு வலி பின்னி எடுக்குதா? அப்போ இத படிங்க!

18-1408330919-3-sitting-posture-at-computer
மனம் மயங்க வைக்கும் கார்பரேட் உலகத்திற்கு உங்களை தாரை வார்த்து விட்டவரா நீங்கள்! நாள் முழுவதும் இதற்காக கம்ப்யூட்டருக்கு முன்னால் அமர்ந்திருப்பதால் சோர்ந்திருப்பவரா?
கம்ப்யூட்டருக்கு முன்னால் முறையான நிலையில் அமராத போது, முதுகு வலி, கழுத்து வலி, முழங்கால் வலி மற்றும் உங்களுடைய கைகள், விரல்கள் மற்றும் மணிக்கட்டுகளில் கடுமையான வலி உணர்வுகள் ஆகியவற்றை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். எனவே, நல்ல நிலையில் கம்ப்யூட்டருக்கு முன்னர் அமரும் நிலையையும், மேலும் சில நல்ல பழக்க வழக்கங்களையும் பின்பற்றுவது மேற்கண்ட பிரச்னைகளை எதிர்கொள்ளாமல் தவிர்க்க உதவும்.
நிற்கும் போதும், நடக்கும் போதும், அமரும் போதும் அல்லது படுக்கும் போதும் உங்களுடைய உடலை சரியான நிலையில் வைத்திருப்பதும் மற்றும் தசைகள் அல்லது மூட்டுகளில் வலி வராமல் இருக்கச் செய்வதும் தான் நல்ல நிலை எனலாம்.
தசைகளை திறமையாக பயன்படச் செய்ய விரும்பினால், எலும்புகளையும், மூட்டுகளையும் நேராக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். சரியான நிலையில் இவ்வாறு வைத்திருப்பதன் மூலமாக மூட்டுகளில் தேவையற்ற அழுத்தங்கள் ஏற்படுவதை தவிர்த்திட முடியும். குறிப்பாக நீங்கள் கம்ப்யூட்டர்களுக்கு முன்னால் நெடுநேரத்திற்கு அமர நேரும் வேளைகளில், சரியான நிலையில் அமர்வது உங்களுடைய முதுகெலும்பை அழுத்தம் உணராத இடமாக வைத்திருக்கவும் மற்றும் தசை வலி மற்றும் முதுகு வலி வராமல் வைத்திருக்கவும் உதவும். சிறந்த பார்வைக்கு மட்டுமல்லாமல், சரியான நிலையில் அமர்வதால் தசை வலிகள் குறைவதுடன், உடலில் குறைந்த அளவு சக்தியை மட்டுமே செலவிட வைக்கவும் முடியும்.
ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் தங்களுடைய முதுகையும் மற்றும் தோள்பட்டைகளையும் நேராக வைத்திருக்கப் பழக வேண்டும். மேலும், உங்களுடைய பிட்டங்கள் நாற்காலியின் பின்புறத்தை தொட்டுக் கொண்டிருக்கவும் வேண்டும்.
உங்களுடைய முதுகுப் பகுதியின் வளைவை சாதாரணமாக இருக்கச் செய்யும் வகையில் குஷன்களையோ அல்லது சுருட்டி வைக்கப்பட்ட டவல்களையோ பயன்படுத்தலாம். சரியான நிலையில் உட்கார்வதற்காக, உங்களுடைய நாற்காலியின் முனையில் அமர்ந்து கொண்டு, முன்னோக்கி மெதுவாக சாய்ந்து கொள்ளுங்கள். பின்னர், உங்களுடைய முதுகுப் பகுதியின் வளைவை முடிந்த வரையில் நேராக வரச் செய்யுங்கள். இந்த நிலையிலேயே சில நொடிகளுக்கு இருக்கவும். அதன் பின்னர், உங்களுடைய இடுப்பு பகுதிக்கு உடலின் எடையை தள்ளியவாறு, சுமார் 10 டிகிரிகளுக்கு வளைந்து உட்காராலாம்.
கம்ப்யூட்டரின் திரையிலிருந்து கையை நீட்டும் தொலைவில் அமர்ந்து கொள்வதன் மூலம், உங்களுடைய பார்வையின் இடைவெளியை கட்டுப்படுத்த முடியும். வலது புறமாக உங்களுடைய முழங்கால்களை மடித்து உட்காரலாம் மற்றும் கால்களை குறுக்காக வைத்தவாறு அமர்வதை தவிர்க்கவும். உங்களுடைய கால் பாதங்கள் தரையை தொடுமாறு வைத்திருக்கவும் மற்றும் உங்களுடைய கண்களை மேல் நோக்கியோ அல்லது கீழ் நோக்கியோ வைத்திருக்காமல் நேராக வைத்திருக்கவும். உங்களுடைய புஜங்கள் மற்றும் முழங்கைகளை நாற்காலியில் ஓய்வு நிலையில் வைத்திருங்கள் மற்றும் தோள்பட்டைகளையும் ஓய்வாக வைத்திருங்கள்.
அவ்வவ்போது ஓய்வு இடைவேளை எடுத்துக் கொள்வதும் அவசியமானது. 30 நிமிடங்களுக்கு மேலாக ஒரே நிலையில் அமர்ந்திருப்பதை தவிர்க்கவும். நீண்ட நேரம் வேலை செய்ததாக நினைத்தால், சற்றே கழுத்துக்கான பயிற்சிகளை செய்திடுங்கள் – உட்கார்ந்த இடத்திலேயே இந்த பயிற்சியை செய்யலாம். உங்களுடைய கழுத்தை முன்பக்கமிருந்து, பின்பக்கமாக திருப்பவும் மற்றும் பக்கவாட்டில் இடப்பக்கமிருந்து, வலப்பக்கமாக திருப்பவும். உங்களுடைய கைகள் இரண்டையும் பின்பக்கமாக வைத்துக் கொண்டு, ஃபார்வார்ட் ரெசிஸ்டன்ஸ் மற்றும் பேக்வார்ட் ரெசிஸ்டன்ஸ் பயிற்சிகளையும் கூட நீங்கள் செய்யலாம். இந்த நிலையிலேயெ ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்கு உங்களை நிலைநிறுத்தி வைத்திருங்கள்.
30 நிமிடங்களிலிருந்து 1 மணிநேரத்திற்கு ஒரு முறை எழுந்து நிற்கவும் மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது, கழிவறைக்கு சென்று வருவது, அருகில் பணியில் உள்ளவரின் இடத்திற்கு சென்று வருவது அல்லது கால்களை நீட்டி முழக்கப் பயன்படும் வகையில் உள்ள அலுவல் இடததிற்கு செல்வது போன்ற செயல்களை செய்யுங்கள். இவ்வாறான சரியான நிலைகளை கம்ப்யூட்டரில் பணி செய்யும் போது, ஒவ்வொரு நாள் வேலையின் போதும் நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பதையும் மற்றும் மற்றவர்களை விட உயர்ந்து நிற்பதையும் உணர்வீர்கள்.