கணினியின் சீமாஸ் அல்லது கடிகார பேட்டரி எங்குள்ளது என கண்டுபிடித்து
எப்படி அதனை கழற்றி புதிய பேட்டரியை அவ்விடத்தில் மாற்றியமைப்பது என
இப்போது காண்போம் இது கணினியின் அமைவுகளை சரியாக கணக்கிட்டு
தாய்ப்பலகையின் மின்சுற்றிற்குள் சேமித்திட பயன்படுகின்றது நம்முடைய
கணினியானது இயக்கத்திலிருந்தாலும் செயல்படாது இருந்தாலும் இந்த கடிகார
பேட்டரியானது எப்போதும் தொடர்ந்து சீமாஸ் அமைப்பை செயல்படுமாறு செய்திட
பயன்படுகின்றது அதனால் குறிப்பிட்ட காலஇடைவெளியில் CR2032 என்ற இந்த சீமாஸ்
பேட்டரியை புதியதாக மாற்றியமைத்து கொள்வது நல்லது என
பரிந்துரைக்கபடுகின்றது
முதலில் கணினிக்குள்ளசெல்லும்
மின்வழங்கும் பொத்தானை அனைத்துவிட்டு அதற்கான கேபிளை பிளக்கிலிருந்து
கழற்றிவைத்தவிட்டோமா என உறுதிசெய்துகொண்டு கணினியை மூடியிருக்கும் பெட்டியை
திறந்திடுக பின் படத்திலுள்ளவாறு சீமாஸ் பேட்டரி பொருத்தபட்டிருக்கும்
லிவரை நகர்த்தி பழைய பேட்டரியை எடுத்துவிட்டு புதியபேட்டரியை பொருத்தி
அதனுடைய லிவரை பழையநிலையில் நகர்த்தி அமைத்திடுக. இதன் பின்
மின்இணைப்பை கணினிக்கு ஏற்படுத்தி கணினியை மறுதொடக்கம் செய்திடுக அப்போது
விசைப்பலகையில் Del அல்லது F2 ஆகியவற்றிலொரு விசையை அழுத்திmotherboard
settings ஐ time/date மறு அமைவுசெய்து சேமித்தபின் மீண்டும் கணியை
மறுதொடக்கம் செய்து இயக்கிடுக.