ஆசிரியர்கள், மாணவர்கள் மாற்று வாசகர்களின் நலன்கருதி புதிய அம்சங்கலுடன் புதிய இணையத்தளமானது விரைவில் வெளியிடப்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். "உங்களுடைய அடைவுக்காக எப்பொழுதும் நாங்கள் "

கணனித் தொகுதி The Computer System

கணனியென்பது தனியொரு உபகரணமல்ல. மாறாக பல பாகங்களையும் துணை கருவிகளையும் இணைத்து இயங்கும் ஒரு தொகுதியாகும். சில கணனிகள் பார்வைக்கு தனியொரு கருவியாகத் தென்பட்டாலும் பல்வேறு வேலைகளைச் செய்வதற்கு அதனுள்ளேயும் வெளியேயும் பல பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றை பின்வருமாறு வகைப்படுத்தலாம்,

வன்பொருள் - Hardware

கணனியுடன் இணைக்கப்பட்டுள்ள எமது கண்ணால் காணக்கூடிய, தொட்டுணரக்கூடிய கருவிகள் கணனி வன்பொருற்களாகும். இவற்றை தேவைகளுக்கேற்ப கணணியில் பொருத்த, அகற்ற அல்லது பழுதுபார்க்க முடியும்.
கணணி வன்பொருட்களை பின்வருமாறு வகைப்படுத்திக் கூறலாம்.

1. மத்திய செயலி Central Processing Unit (CPU)

இது கணனியின் பிரதான செயற்பாட்டுப் பகுதியாகும். கணனி செயற்படும்போது அதன் இயக்கத்தை நிர்வகிப்பதும் கட்டுப்படுத்துவதும் இதன் பிரதான செயற்பாடாகும். கணனியின் மூளை என்று இதனைக் கூறலாம்.


2. சேமிப்பகம்  Storage

தரவுகளைக் கணனியில் சேமித்து வைப்பதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் சேமிப்பகங்களாகும். இது பிரதானமாக இரு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.


2.1. முதன்மைச் சேமிப்பகம்  Primary Storage

கணனி இயங்கிக்கொண்டிருக்கும்போது அதன் இயக்கத்துக்குத் தேவையான தரவுகள்,  மென்பொருள் வழிமுறைகள் போன்றவை முதன்மைச் சேமிப்பகத்தில் சேமிக்கப்படும். கணணியின் அகத்தே பொருத்தப்பட்டுள்ள இச்சேமிப்பங்களில் RAM, ROM  என இருவகை உள்ளன.

RAM (Random Access Memory)    தற்போக்கு அனுகல் நினைவகம் என்பது கணனியின் இயக்கத்தின்போது உடனுக்குடன் தேவைப்படும் தரவுகளை தற்காலிகமாக சேமித்து வைக்கிறது. நாம் கணனிக்கு உள்ளிடும் தரவுகள் முதலில் இப்பகுதியிலே செலுத்தப்படும். இச்சேமிப்பகத்திலுள்ள தரவுகள் கணனியின் இயக்கத்தை நிறுத்தியவுடன் அழிந்து விடும்.

ROM (Read Only Memory) வாசிக்க மாத்திரமான நினைவகம். இதிலுள்ள தரவுகளை கணனியானது வாசிப்பதற்கு மாத்திர பயன்படுத்தும்.  கணனியின் இயக்கத்துக்குத் தேவையான பிரதான அறிவுருத்தல்கள் இவற்றில் சேமிக்கப்பட்டிருக்கும். கணனியை இயக்கியவுடன் அத்தரவுகளை வாசித்து அதன்படி இயங்கும். ஆனால் இவற்றில் தரவுளைப் பதிவு செய்ய முடியாது. கணனியின் அகத்தேயுள்ள சிப் (chip) களில் அவை தயாரிக்கப்படும்போதே தேவையான தரவுகள் பதியப்படும்.


2.2.  துணைச் சேமிப்பகம்  Secondary Storage

தரவுகளை நிரந்தரமாக சேமித்து வைக்க இவை பயன்படுத்தப்படுகின்றன. கணனியின் இயக்கம் நிறுத்தப்பட்டாலும் இவற்றிலுள்ள தரவுகள் அழிவதில்லை. உதாரணமாக மென்தட்டு (Floppy Disk),  நிலை வட்டு (Hard Disk) குறுவட்டு (CD ROM), Pen Drive போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
   

3. உள்ளிடு கருவிகள்  Input Devices

நாம் கணணிக்கு தரவுகளை உட்செலுத்துவதற்காகப் பயன்படுத்தும் கருவிகள் உள்ளிடு கருவிகள் எனப்படும். உதாரணமாக Keyboard, Mouse, Touch Screen, Joystick, Barcode reader, Smart Cards, CD Rom, Digital Camera, Microphone போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

4. வெளியிடு கருவிகள் Output Devices

கணணியிலிருந்து தகவல்கள் வெளியிடப்படும் கருவிகள் வெளியிடு கருவிகளாகும். இவை மனிதன் பார்க்கக்கூடிய, கேட்கக்கூடிய அல்லது உணரக்கூடிய முறைகளில் வெளியிடப்படும். உதாரணமாக கணணித்திரை (Monitor), Speaker, Printer  போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

மென்பொருள்   Software

கணணித்தொகுதியின் செயற்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக அதற்கு வழங்கப்படும் அறிவுருத்தற் தொகுதியானது மென்பொருள் எனப்படும். மென்பொருளின் பிரதான செயற்பாடுகள்,
  • கணணியின் பாகங்களைக் கட்டுப்படுத்தல்.
  • கணணியை இயக்குபவருக்கு அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
  • சேமிப்பகங்களிலுள்ள தரவுகளையும் கணணித்தொகுதியையும் இணைக்கும் ஊடகமாகச் செயற்படல்.
மென்பொருட்கள் கணணியின் சேமிப்பகங்களில் பதியபப்ட்டிருக்கும். இவை கணியின் தேவைக்கேற்ப முதன்மை சேமிப்பகத்திற்கு ஏற்றப்பட்டு அதிலிருந்து அறிவுருத்தல்களைப் பெற்று இயங்கும்.
மென்பொருளானது இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது.

i.  மென் தொகுதி (System Software): கணணியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் மென்பொருள் தொகுதி இதுவாகும். உதாரணம்: Windows, Linux போன்றன.

ii. மென் ஒருங்கு (Application Software) : கணணியில் நமக்கு வெவ்வேறு வேலைகளைச் செய்துகொள்ள களம் அமைத்துத்தரும் மென்பொருட்கள் இப்பிரிவில் அடங்கும். உதாரணமாக: Microsoft Word, Microsoft Excel, Adobe Photoshop, CorelDraw…

உயிர்ப் பொருள்  Live ware

இது கணனியை இயக்குபவரைக் குறிக்கும்

நிலை பொருள்   Firmware

கணணியுடன் இணைக்கப்படும் கருவிகளில் உள்ள விசேட சேமிப்பகங்களில் பதியப்பட்டிருக்கும் மென்பொருட்கள் நிலைபொருள் எனப்படும். ஒவ்வொரு கருவிகளின் செயற்பாடுகள் பற்றியும் அவற்றின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அறிவுருத்தல்களையும் இதன் மூலம் கணணி பெற்றுக்கொள்ளும். உதாரணமாக கணனியுடன் ஒரு ப்ரின்டரை இணைக்கும்போது அந்த ப்ரிண்டரிலுள்ள Chip இல் சேமிக்கப்பட்டிருக்கும் அதன் நிலைபொருளை கணனி வாசித்து, அதைப்பற்றி அறிந்து கொள்ளும். (ப்ரிண்டரின் வகை, செயற்படும் விதம் போன்றவற்றை) பின்னர் அதற்கேற்றவாறு ப்ரிண்டருடன் இணைந்து செயற்படும்.