ஆசிரியர்கள், மாணவர்கள் மாற்று வாசகர்களின் நலன்கருதி புதிய அம்சங்கலுடன் புதிய இணையத்தளமானது விரைவில் வெளியிடப்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். "உங்களுடைய அடைவுக்காக எப்பொழுதும் நாங்கள் "

புகைப்படத்தை கடவுச்சொல்லாக்கும் வசதி உள்ள விண்டோஸ் 8

விண்டோஸ் 8 இயங்குதளத்தில் கணனிக்கான கடவுச்சொல்லாக நமக்கு பிடித்தமான புகைப்படங்களை வைக்கும் வசதி உள்ளது.

கணனியில் Settings பகுதிக்கு சென்று Change PC settings என்பதை க்ளிக் செய்யுங்கள்.

அங்கே இடதுபக்கம் Users என்பதை க்ளிக் செய்து Sign-in Options என்ற இடத்தில் Create a picture password என்பதை க்ளிக் செய்யுங்கள்.
அங்கே Choose picture என்பதை க்ளிக் செய்து உங்களுக்கு பிடித்த புகைப்படத்தை தெரிவு செய்யுங்கள்.
தெரிவு செய்த படத்தை உங்களுக்கு விருப்பமான முறையில் நகர்த்தி Use this picture என்பதை க்ளிக் செய்யுங்கள்.
புகைப்படத்தில் வட்டம், கோடு, புள்ளி ஆகிய மூன்று சைகைகள் (Gestures) வரையலாம். மூன்றும் ஒரே சைகையாகவும் இருக்கலாம், வெவ்வேறு சைகைகளாகவும் இருக்கலாம். இதனை இரண்டு முறை செய்ய வேண்டும். இது தான் நீங்கள் கொடுக்கும் கடவுச்சொல்.
கடவுச்சொல் உருவாக்கப்பட்ட செய்தி காட்டும். பின்பு Finish என்பதை க்ளிக் செய்யுங்கள்.
பின்னர் நீங்கள் கணனியில் உள்நுழையும் போது படத்தைக் காட்டும். நீங்கள் செய்துள்ள சைகைகளை சரியாக செய்தால் உள்ளே போகலாம். கடவுச்சொல் மறந்துவிட்டால், இடதுபுறம் Switch to Password என்றிருக்கும். அதன் மூலம் உள்ளே போகலாம்.