சமூக இணையத்தளங்களின் வரிசையில் இரண்டாம் இடத்தில் காணப்படும் Google+ தளத்தில் Google Hangouts எனும் நண்பர்களுடனான வீடியோ சட்டிங் வசதி தரப்பட்டுள்ளமை யாவரும் அறிந்ததே.
ஆனால் தற்போது இதே Google Hangouts வசதி மேம்படுத்தப்பட்டு குடும்பத்தவர்கள், நண்பர்களின் கணனிகளை அல்லது வியாபார குழுவினரது கணனிகளை அவர்களின் அனுமதியுடன் கட்டுப்படுத்தக்கூடிய அல்லது கையாளக்கூடிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Google Hangouts Remote Desktop Control என அழைக்கப்படும் இப்புதிய வசதியானது கூகுளினால் குரோம் உலாவியில் அறிமுகப்படுத்தப்பட்ட Chrome Remote Desktop வசதிக்கு ஒப்பானதாகக் காணப்படுகின்றது.
இப்புதிய வசதி தொடர்பாக கூகுள் நிறுவனத்தில் பணி புரியும் Daniel Caiafa என்பவர் தனது கூகுள் பிளஸ் பக்கத்தில் விபரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.