புதிய தொழில்நுட்ப உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாமல் இனி எந்த வேலையும் நடக்காது என்ற நிலை.கணினியோடு கணினியாக நம் மனித இனம் இணைந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளிலும் பெரும்பாலான பகுதியை கணினியுடனே நாம் செலவிடுகிறோம்.
இவ்வாறு கணினியுடன் பணிபுரியும் நேரங்களில், சோர்வாக இருக்கும் நேரங்களில் நமக்கு விருப்பமான தொலைக்காட்சிகளையும் நாம் பார்க்க முடியும்.
ஒரு சில வருடங்களுக்கு முன்பு இணையத்தில் டி.வி பார்ப்பது என்பது முடியாத செயலாக இருந்து வந்தது.. தற்போது அது சாத்தியமாகியிருக்கிறது.
உங்களுக்குப் பிடித்த அனைத்து தொலைக்காட்சிகளையும் இணையத்தின் மூலமே இனி கண்டுகளிக்கலாம்.
இந்த வசதியை நமக்கு ஏற்படுத்தி தந்திருப்பது.. உலக தேடுபொறி தளங்களிலேயே முதன்மையான நிறுவனமான கூகிள்தான்..
கூகிள் பல்வேறு நாட்டு தொலைக்காட்சிகளை இணையத்தில் பார்க்கும் வசதியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. உலகநாடுகளின் 3000 க்கும் மேற்பட்ட டி.வி சேனல்களை தற்போது நாம் இணையத்தில் வழியே பார்க்க முடியும்.
இணையத்தில் டி.வி பார்க்க செய்ய வேண்டியது:
Google Chrome பயனர்களுக்கு:
1. உங்கள் கணினியில் கூகிள் குரோம் உலவி நிறுவி இருக்க வேண்டும்.
2. கூகிள் உலவியைத் திறந்துகொள்ளுங்கள்.
3. கீழிருக்கும் இணைப்பை கிளிக் செய்யுங்கள்.
திறக்கும் பக்கத்தில் ADD TO CHROME என்னும் பட்டனை கிளிக் செய்து Install கொடுத்து Add-On உலவியில் இணைத்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பப்பட்ட நாடுகளில் உள்ள 3000க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகளைக் கண்டுகளியுங்கள்.
FireFox பயனர்களுக்கு:
நீங்கள் பயர்பாக்ஸ் உலவி பயனர்கள் எனில் உங்களுக்கென இந்த Plugin உள்ளது.
உங்கள் பயர்பாக்ஸ் உலவியில் கீழிருக்கும் இணைப்பின் வழி சென்று Fire fox TV Plugin டவுன்லோட் செய்து நிறுவிக்கொள்ளுங்கள்.
இந்த பிளகின் மூலம் நீங்கள் உலகிலுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகளைக் கண்டுகளிக்க முடியும்.