ஆசிரியர்கள், மாணவர்கள் மாற்று வாசகர்களின் நலன்கருதி புதிய அம்சங்கலுடன் புதிய இணையத்தளமானது விரைவில் வெளியிடப்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். "உங்களுடைய அடைவுக்காக எப்பொழுதும் நாங்கள் "

கோப்புகளின் அளவை சிறிதாக்க...

தகவல்தொழில்நுட்பத்தில் கணினி சார்ந்த கோப்புகள் மற்றும் தரவுகள் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். நமது தேவைக்கேற்ப கோப்புகளின் அளவும், வடிவங்களும் மாறுபடுகின்றன.உதாரணமாக MS document, Flash, PHotoshop, video கோப்புகளைக் கூறலாம்.

இவ்வாறான கோப்புகளை நம் கணினியில் சேமித்து வைக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. கோப்புகளைச் சேமித்துவைக்க கடந்த பதிவில் கூறியுள்ளபடி, குறுவட்டுகள் முதல், Pendrive, Memory card மற்றும் Computer Hard Disk கள் வரை அனைத்தையும் நாம் பயன்படுத்துகிறோம்.


இவை அனைத்துமே குறிப்பிட்ட கொள்ளளவு (capacity) கொண்டவே.. அளவில்லாமல் சேமிப்பதற்கான சாதனங்கள் இதுவரை கண்டுபிடிப்படவில்லை. இணையத்தில் கூட கோப்புகளை சேமித்து வைக்கலாம் என்றாலும் கூட, அங்கும் குறிப்பிட்ட கொள்ளளவு மட்டுமே பயன்படுத்தும் வகையில் அமைத்துள்ளனர்.


இதுபோன்ற கட்டுப்பாடுகள் நிறைந்த கோப்புகள் சேமிப்பகத்தில் நம்மால் நாம் விரும்பியபடி அனைத்து கோப்புகளையும் சேமித்து வைக்க இயலாமல் போய்விடுகிறது. ஆனால் இதற்கு ஒரு மாற்றுவழி உண்டு.
                                             
அதாவது, பெரிய அளவுள்ள கோப்புகளை சுருக்கி அவற்றைச் சேமித்துக்கொள்ளும் தொழில்நுட்பம் ஆகும். இத்தொழிற்நுட்பத்திற்கு ஃபைல் ஜிப்பிங் (File Zipping) அல்லது Compressing என்று பெயர்.


இத்தொழில்நுட்பம் சாதாரணமாக நம் கணினியிலே இணைக்கப்பட்டிருக்கும். விண்டோஸ் இயங்குதளங்களைக் கொண்ட கணினிகளில் இவ்வசதியை நாம் காண முடியும். ஒரே நேரத்தில் பல கோப்புகளை இணையத்தினூடே அனுப்புவதற்கு இவ்வசதியைப் பயன்படுத்தலாம். ஆனால் இதன் மூலம் குறிப்பிட்ட அளவுள்ள கோப்புகளை மட்டுமே சுருக்கி அனுப்ப முடியும்.


ஆனால் பெரும்பாலான கணினிப் பயனர்கள் தரவுகளைச் சுருக்க, Win RaR, 7zip போன்ற மென்பொருள்களைப் பயன்படுத்தியே கோப்புகளை சுருக்கிப் பயன்படுத்துகின்றனர். இம்மென்பொருளும் நமது தேவைகளுக்கேற்ப பெரியளவில் ஒன்றும் கோப்புகளை Data Encryption செய்வதில்லை.
                                          


ஒரு சில குறிப்பிட்ட மென்பொருள்கள் கோப்புகளின் கட்டமைப்புகளில் (File Structure) மாற்றங்கள் செய்வதன் மூலம் 10GB அளவுள்ள கோப்பை 10MB குறைந்த அளவாக சுருக்கிவிடுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க மென்பொருள்தான் KGB Archiver.


KGB Archiver மென்பொருள் முற்றிலும் இலவசம். இது திறமூலவகை (Open Source) மென்பொருள் என்பதால் பயன்படுத்துவது மிக எளிது. இம்மென்பொருளின் தரவு சுருக்க செயல்பாடானது PAQ6 என்ற முறைமையில் இயங்குகிறது. KGB Archiver மென்பொருள் என்கிற மிக சக்திவாய்ந்த தரவு சுருக்க முறையை கையாள்கிறது. தரவுகளை பைனரி (Binary) தொகுதிகளாக மாற்றி சேமிக்கிற முறையை பயன்படுத்துகிறது. இது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் வகை இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.


இம்மென்பொருளைக் கொண்டு, கோப்புகளைச் சுருக்கும்போது மென்பொருள் அதிவேகமாக செயல்பட்டு, கோப்புகளை சுருக்கித் தருகிறது. இம்மென்பொருளில் ஒரு சிறிய குறை என்னவென்றால் கோப்புகளை மீண்டும் விரித்துப்பெற இதே மென்பொருளையே மற்றவர்கள் பயன்படுத்த வேண்டும் என்பதுதான். அதாவது இம்மென்பொருள் மூலம் சுருக்கப்பட்ட கோப்புகளை மீண்டும் விரித்துப்பெறுவதற்கு இதே மென்பொருள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். 


இதில் High, Mazimum, normal, low, very weak போன்ற முறைகளில் கோப்புகளைச் சுருக்க வழிமுறைகள் காணப்படுகின்றன. இம்மென்பொருளை நிறுவ உங்கள் கணினியில் 256 MB Ram மற்றும் 1.5 Ghz Processor ஆகிய குறைந்தளவு வன்பொருள் இருந்தாலே போதுமானது.


மென்பொருளின் சிறப்புகள்: 

.kgb மற்றும் .zip வகை கோப்புகளை ஆதரிக்கும் தன்மை.

self-extracting கோப்புகளை உருவாக்க முடியும்.


குறிப்பாக சொல்வதெனில் இம்மென்பொருள் unicode எழுத்துருக்களை ஆதரிப்பதால் தமிழ் மொழியில் உள்ள கோப்புகளை கூட இதில் பயன்படுத்தலாம்.

சுருக்கப்பட்ட கோப்புகளுக்கு கடவுச்சொல் (Password) கொடுத்து பாதுகாக்க முடியும்.


இத்தகைய சிறப்புமிக்க இம்மென்பொருளை தரவிறக்கி, உங்களுடைய அதிக கொள்ளளவு கொண்ட கோப்புகளை மிகச்சிறிய கொள்ளவுகொண்ட கோப்பாக சுருக்கிப் பயன்படுத்துங்கள்.


மென்பொருளுக்கான தரவிறக்கச்சுட்டி: http://sourceforge.net/projects/kgbarchiver/