ஆசிரியர்கள், மாணவர்கள் மாற்று வாசகர்களின் நலன்கருதி புதிய அம்சங்கலுடன் புதிய இணையத்தளமானது விரைவில் வெளியிடப்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். "உங்களுடைய அடைவுக்காக எப்பொழுதும் நாங்கள் "

HTML கற்பவர்களுக்கு பயன்படும் மென்பொருள்

இன்றைய கணினி யுகத்தில் Programming மற்றும் Web designing வெப்டிசைனிங் துறைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துவிட்டது.கணினிப் பற்றிய கற்றல்களில் உள்ளடங்கிய வலைத்தள வடிவமைப்பிற்கு, HTML என்பது அடிப்படை ஆதாரம் ஆகும்.

இவ்வடிப்படையைக் (HTML) கற்றுக்கொண்டால் இத்துறையில் பல்வேறு தருணங்களில், பல்வேறு இடங்களில் இது பயன்படும்.

HTML கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் மைக்ரோசாப்டின் NotePad பயன்பாட்டையே பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதைவிட கூடுதல் வசதிகளை உள்ளடக்கியுள்ளது Notepad++.

Note Pad மூலம் நாம் எழுதும் HTML Tags ஆனது சில சமயங்களில் முழுமைப் பெற்றிருக்காது. இவற்றை கவனிக்காமலேயே நாம் அக்கோப்பை சேமித்த உலவியில் திறந்து பார்க்கும்போது, எதிர்பார்த்த வெளிப்பாட்டை பெற முடியாது. ஏதேனும் ஒரு இடத்தில் குறீயீடுகளை முழுமையாக முடிக்காமல் விட்டிருந்தாலும், அவற்றை நாமாகத்தான் கண்டறிந்து திருத்தம் செய்து முடிக்க வேண்டும்.

ஆனால் Notepad++ ல் நாம் உள்ளிட்ட HTML Tag களில் ஏதேனும் முடிக்கபடாமலிருந்தால் அவற்றை சுட்டிக்காட்டும் வசதி உள்ளது. அதாவது ஒரு HTML குறிஒட்டை ஆரம்பித்ததிலிருந்து முடிக்கும் வரை, சரியாக அவற்றை நிறைவு செய்த பிறகே அது முழுமையடையும். அதன் மூலம் தவறாக நாம் உள்ளீடு செய்தாலும் அவற்றை எளிதாக கண்டறியலாம்.

மற்றுமொரு வசதி ஏதாவது ஒரு குறிப்பிட்ட சொல்லை நாம் தேர்வு செய்யும்போது அவற்றைபோன்று ஒத்திருக்கும் சொற்களனைத்தும் Hi light செய்து காண்பிக்கும். கூடுதலாக மேம்படுத்தபட்ட தேடல் வசதி, பயன்படுத்திக்கொண்டிருக்கும் கோப்புகளனைத்தையும் தனித்தனி Tabகளில் காட்டப்படும் வசதி ஆகியவற்றை கொண்டுள்ளது.

அத்தோடு மட்டுமல்லாமல் கணினி மொழிகளான C, C++, C#, Java, PHP, XML, Java Script VB போன்ற பல்வேறு புரோகிராம்களையும் எழுதி கையாள முடிகிறது.

இத்தனை வசதிகளையும் உள்ளடக்கிய NotePad ++ முற்றிலும் ஒரு இலவச பயன்பாடு என்பது கூடுதல் சிறப்புச் செய்தி.

இம்மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன்படுத்திப் பாருங்கள்...! நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.