ஆசிரியர்கள், மாணவர்கள் மாற்று வாசகர்களின் நலன்கருதி புதிய அம்சங்கலுடன் புதிய இணையத்தளமானது விரைவில் வெளியிடப்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். "உங்களுடைய அடைவுக்காக எப்பொழுதும் நாங்கள் "

                                                                                          بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

                                                                     எனது தளத்துக்கு வருகைதரும் அனைவருக்கும் السلام عليكم ورحمة الله وبركاته.

எனது இணைய தளமானது A/L,O/L,GIT...ICT பாடத்தினை கற்கும் மாணவர்களுக்காக வடிவமைக்க பட்டுள்ளது.உங்கள் வருகையை நினைவூட்ட FACEBOOK பகுதியில் உள்ள LIKE Button ஐ கிளிக் செய்யவும்....தெரியாததை தெரிந்து கொள்வோம்.தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்....

GCE Advanced Level ICT

                                                                     எனது தளத்துக்கு வருகைதரும் அனைவருக்கும் السلام عليكم ورحمة الله وبركاته.

எனது இணைய தளமானது A/L,O/L,GIT...ICT பாடத்தினை கற்கும் மாணவர்களுக்காக வடிவமைக்க பட்டுள்ளது.உங்கள் வருகையை நினைவூட்ட FACEBOOK பகுதியில் உள்ள LIKE Button ஐ கிளிக் செய்யவும்....தெரியாததை தெரிந்து கொள்வோம்.தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்....

GCE Ordinary Level Examination ICT

                                                                     எனது தளத்துக்கு வருகைதரும் அனைவருக்கும் السلام عليكم ورحمة الله وبركاته.

எனது இணைய தளமானது A/L,O/L,GIT...ICT பாடத்தினை கற்கும் மாணவர்களுக்காக வடிவமைக்க பட்டுள்ளது.உங்கள் வருகையை நினைவூட்ட FACEBOOK பகுதியில் உள்ள LIKE Button ஐ கிளிக் செய்யவும்....தெரியாததை தெரிந்து கொள்வோம்.தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்....

General Information Technology (GIT)

                                                                     எனது தளத்துக்கு வருகைதரும் அனைவருக்கும் السلام عليكم ورحمة الله وبركاته.

எனது இணைய தளமானது A/L,O/L,GIT...ICT பாடத்தினை கற்கும் மாணவர்களுக்காக வடிவமைக்க பட்டுள்ளது.உங்கள் வருகையை நினைவூட்ட FACEBOOK பகுதியில் உள்ள LIKE Button ஐ கிளிக் செய்யவும்....தெரியாததை தெரிந்து கொள்வோம்.தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்....

General ICT

                                                                     எனது தளத்துக்கு வருகைதரும் அனைவருக்கும் السلام عليكم ورحمة الله وبركاته.

எனது இணைய தளமானது A/L,O/L,GIT...ICT பாடத்தினை கற்கும் மாணவர்களுக்காக வடிவமைக்க பட்டுள்ளது.உங்கள் வருகையை நினைவூட்ட FACEBOOK பகுதியில் உள்ள LIKE Button ஐ கிளிக் செய்யவும்....தெரியாததை தெரிந்து கொள்வோம்.தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்....

Site Demo - 02




அன்பார்ந்த ICT ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் இருந்து
"தமிழ்மொழி மூலமான ICT கற்றலுக்கு நாமும் உதவுவோம் "
நாங்கள் இவ்வருடம் டிசம்பர் மாதத்திற்கு முன்பதாக ஒரு பயனுள்ள புதிய அம்சங்களை கொண்ட இணையத்தளம் ஒன்றினை வெளியிட தயாராகவுள்ளோம். இது கடந்த காலங்களாக A/L ICT, O/L ICT, Grade 1-9 ICT , GIT, NVQ Levels (3,4,5) , HNDIT - SLIATE , BIT (University of Moratuwa and University of Colombo ) இல் கற்கும், கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்நோக்குகின்ற வளப்பற்றாக்குறையினை நிவர்த்திசெய்வதற்கான ஒரு செயற்பாடாக அமையும் .

இதற்காக உங்களால் முடிந்த வளப்பகிர்வுகளை இங்கு பதிவேற்றம் செய்யமுடியும் .
*(Past Papers, Model Papers, School Exam Papers, Schemes, Public Exam Papers & other resources)
#Medium : SINHALA | TAMIL | ENGLISH #Grade : ALL


Contact Us :
Website (old) : http://alict2014.blogspot.com
Facebook : https://web.facebook.com/ESelfLearn/
Email : eselflearn@gmail.com

" தெரியாததை தெரிந்து கொள்வோம்.தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம் "

Site Demo - 01



அன்பார்ந்த ICT ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் இருந்து
"தமிழ்மொழி மூலமான ICT கற்றலுக்கு நாமும் உதவுவோம் "
நாங்கள் இவ்வருடம் டிசம்பர் மாதத்திற்கு முன்பதாக ஒரு பயனுள்ள புதிய அம்சங்களை கொண்ட இணையத்தளம் ஒன்றினை வெளியிட தயாராகவுள்ளோம். இது கடந்த காலங்களாக A/L ICT, O/L ICT, Grade 1-9 ICT , GIT, NVQ Levels (3,4,5) , HNDIT - SLIATE , BIT (University of Moratuwa and University of Colombo ) இல் கற்கும், கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்நோக்குகின்ற வளப்பற்றாக்குறையினை நிவர்த்திசெய்வதற்கான ஒரு செயற்பாடாக அமையும் .
இதற்காக உங்களால் முடிந்த வளப்பகிர்வுகளை இங்கு பதிவேற்றம் செய்யமுடியும் .
*(Past Papers, Model Papers, School Exam Papers, Schemes, Public Exam Papers & other resources)
#Medium : SINHALA | TAMIL | ENGLISH #Grade : ALL
Contact Us :
Website (old) : http://alict2014.blogspot.com
Facebook : https://web.facebook.com/ESelfLearn/
Email : eselflearn@gmail.com

" தெரியாததை தெரிந்து கொள்வோம்.தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம் "

The Web Blocker: குறிப்பிட்ட இணையத்தளங்களை தடை செய்வதற்கு

இணையத்தில் எந்த அளவுக்கு நன்மைகள் உள்ளதோ, அதே அளவுக்கு தீமைகளும் உண்டு என்று கூறினால் அது மிகையல்ல.
இணையத்தை பயன்படுத்தி கொண்டிருக்கும் போது, சில தளங்கள் ஓபனாகி எரிச்சலூட்டும்.
அவ்வாறான தளங்களை Block செய்வதற்கு The Web Blocker என்ற மென்பொருள் பயன்படுகிறது.

இதற்கு முதலில் குறித்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவிக் கொள்ளவும்.
நிறுவும் போது ClaroBrowser Tool Bar, PC Utilities Pro, Babylon போன்றவை இன்ஸ்டால் செய்யலாமா என்று கேட்கப்படும், அப்போதெல்லாம் Decline என்பதை கிளிக் செய்யவும்.
மென்பொருளை நிறுவிய பின், குறித்த மென்பொருளை ஓபன் செய்யவும். அதில் தோன்றும் விண்டோவில் Add Address to Block List என்று காட்டப்படும்.
இதில் நீங்கள் Block செய்ய வேண்டிய தளத்தின் முகவரியை கொடுக்கவும்.
அவ்வளவு தான் இனிமேலும் நீங்கள் அத்தளத்தை ஓபன் செய்தால் Error செய்தி காட்டப்படும்.
இதேபோன்று எத்தனை தளங்களை வேண்டுமானாலும் Block செய்து கொள்ளலாம்.

Windows Login Key ஆக USB சாதனம்

ESK02j2uo8OMbayUxmUF0YEckhLWkAn4Gm3EKq9Ifqmk+c38RIrXaLZCjxB0b6uIyOiBawiR8ZDXEEg5HC/ALVPY7uA43T10XuKSTeszFhOVzHNeLXBa4Ag6jlzHVa89eMLYYKasAAkZLuHHm+NzXOAPWxbp0zHqth4FgkFDFuKVm7ZmL7ZnOJcbXJc4kngPC1F634pUPnipXxOigjvJC86ipkIs5wI0GW5GXiLkniEx7Gw/Sv6qofzJP4iRa79ev9Lpf0Y/vXLYfpV9U0P5kn8RIte+vX+l0n6Mf3rlcfyGK+m/1ph9/9a7zuZLLKZCSSXEk3NyTc+VgWztf7arpKgkAQ1Eb3npGJBn/APzdbIxum3VRPH0kcW/mk5m/sIWn6n09r7NMeecfs54Hg8lXJu47ADV7z9Fg5fM9B/JWNXQYZGTFLUVOZpyue2P4GuHHTISvrRTOhw2SWFxa91U0SOGjmtaGkfhwஇணையத்தில் எந்த அளவுக்கு நன்மைகள் உள்ளதோ, அதே அளவுக்கு தீமைகளும் உண்டு என்று கூறினால் அது மிகையல்ல.
Windows Login Key ஆக USB சாதனத்தை பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கணனிகளின் பிரத்யேக பாவனையின் பொருட்டு கடவுச்சொற்கள் கொடுப்பதற்கு பல்வேறு வழிகள் காணப்படுகின்ற நிலையில் தற்போது USB சாதனத்தையும் Windows Login Key ஆக பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இச்செயல் முறைக்கென பயன்படுத்தப்படும் Mobilegov Winlogon மென்பொருளானது USB சாதனத்தை இலகுவான முறையில் பாதுகாப்புடன் கூடிய உள்நுளைவு டோக்கன் (Security Token) ஆக மாற்றி அமைக்கின்றது.
இம்முறையானது ஏனையவற்றினைக் காட்டிலும் சிறந்த பாதுகாப்பானதாகக் காணப்படுவதுடன் கடவுச்சொற்கள் எவையும் USB சாதனத்தில் சேமிக்கப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

புகைப்படத்தை கடவுச்சொல்லாக்கும் வசதி உள்ள விண்டோஸ் 8

விண்டோஸ் 8 இயங்குதளத்தில் கணனிக்கான கடவுச்சொல்லாக நமக்கு பிடித்தமான புகைப்படங்களை வைக்கும் வசதி உள்ளது.

கணனியில் Settings பகுதிக்கு சென்று Change PC settings என்பதை க்ளிக் செய்யுங்கள்.

அங்கே இடதுபக்கம் Users என்பதை க்ளிக் செய்து Sign-in Options என்ற இடத்தில் Create a picture password என்பதை க்ளிக் செய்யுங்கள்.
அங்கே Choose picture என்பதை க்ளிக் செய்து உங்களுக்கு பிடித்த புகைப்படத்தை தெரிவு செய்யுங்கள்.
தெரிவு செய்த படத்தை உங்களுக்கு விருப்பமான முறையில் நகர்த்தி Use this picture என்பதை க்ளிக் செய்யுங்கள்.
புகைப்படத்தில் வட்டம், கோடு, புள்ளி ஆகிய மூன்று சைகைகள் (Gestures) வரையலாம். மூன்றும் ஒரே சைகையாகவும் இருக்கலாம், வெவ்வேறு சைகைகளாகவும் இருக்கலாம். இதனை இரண்டு முறை செய்ய வேண்டும். இது தான் நீங்கள் கொடுக்கும் கடவுச்சொல்.
கடவுச்சொல் உருவாக்கப்பட்ட செய்தி காட்டும். பின்பு Finish என்பதை க்ளிக் செய்யுங்கள்.
பின்னர் நீங்கள் கணனியில் உள்நுழையும் போது படத்தைக் காட்டும். நீங்கள் செய்துள்ள சைகைகளை சரியாக செய்தால் உள்ளே போகலாம். கடவுச்சொல் மறந்துவிட்டால், இடதுபுறம் Switch to Password என்றிருக்கும். அதன் மூலம் உள்ளே போகலாம்.

தொலைவிலிருந்து கணனிகளைக் கட்டுப்படுத்தும் வசதியை Google Hangouts தருகின்றது

சமூக இணையத்தளங்களின் வரிசையில் இரண்டாம் இடத்தில் காணப்படும் Google+ தளத்தில் Google Hangouts எனும் நண்பர்களுடனான வீடியோ சட்டிங் வசதி தரப்பட்டுள்ளமை யாவரும் அறிந்ததே.
ஆனால் தற்போது இதே Google Hangouts வசதி மேம்படுத்தப்பட்டு குடும்பத்தவர்கள், நண்பர்களின் கணனிகளை அல்லது வியாபார குழுவினரது கணனிகளை அவர்களின் அனுமதியுடன் கட்டுப்படுத்தக்கூடிய அல்லது கையாளக்கூடிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Google Hangouts Remote Desktop Control என அழைக்கப்படும் இப்புதிய வசதியானது கூகுளினால் குரோம் உலாவியில் அறிமுகப்படுத்தப்பட்ட Chrome Remote Desktop வசதிக்கு ஒப்பானதாகக் காணப்படுகின்றது.
இப்புதிய வசதி தொடர்பாக கூகுள் நிறுவனத்தில் பணி புரியும் Daniel Caiafa என்பவர் தனது கூகுள் பிளஸ் பக்கத்தில் விபரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Type பண்ணாமல் நினைத்தாலே Password களை அறிந்து கொள்ளலாம்..!

இணையதளத்தில் இருக்கும் நமது அக்கவுண்டுகளை பாதுகாப்பாக வைக்க பாஸ்வேர்ட் பயன்படுத்தப்படுகிறது, மற்றவருக்கு வெறும் ***** ஆக தெரியும் இந்த பாஸ்வேர்ட் பல முக்கிய விவகாரங்களை பாதுகாக்க பயன்படுகிறது.வளர்ந்து வரும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பில் தற்போது பாஸ்வேர்டுக்கும் வழி வந்துவிட்டது.
யு.சி.பெர்க்லி ஸ்கூல் (UC Berkeley school of information) என்ற ஆராய்ச்சி மையம், பாஸ்வேர்டை டைப் செய்வதற்குப் பதிலாக மனதில் நினைப்பதன் மூலமே நமது தகவல் தொடர்பினை இயக்க முடியும் என்று கூறுகிறது.
இம்மையத்தின் பேராசிரியர் ஜான் சுவாங், ஜப்பான் நாட்டின் ஒக்கினாவா நகரில் நடைபெற்ற, பதினேழாவது தகவல் பாதுகாப்பு மற்றும் ரகசியக் குறியீடு எழுத்து குறித்த கருத்தரங்கில், இந்த ஆராய்ச்சியின் அறிக்கையை சமர்ப்பித்தார்.

அவருடைய குழுவினர், ஈஈஜி சென்சார்கள்electroencephalograms (EEGs), புளூடூத் மற்றும் தலையணைக் கருவி உபயோகிப்பதன்மூலம் இதனை நடைமுறைப்படுத்த முடியும் என்பதை அங்கு செயல்படுத்திக் காட்டினார்கள்.
சமீபகாலமாக, ஆராய்ச்சிகளில் பாதுகாப்பு கருதி விஞ்ஞானிகள் இம்முறையை பயன்படுத்துகின்றனர். மற்ற உடற்புள்ளியியல் முறைகள் போலவே, இம்முறையும் சிக்கலான, விலை உயர்வான பயன்பாடுகளைக் கொண்டது.
ஆனால், பாதுகாப்பான, துல்லியமான மற்றும் மீண்டும் கையாளக்கூடிய விதத்திலும் அமைந்திருப்பது இம்முறையின் சிறப்புகள் என்பது இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

கணனியின் வேகத்தை பேணும் Synei System Utilities எனும் இலவச மென்பொருள்.

Synei System Utilities மென்பொருள்
புதியதொரு கணணியை அல்லது புதிதாக Windows நிறுவப்பட்ட ஒரு கணணியை பயன்படுத்துகையில் கண்ணிமைக்கும் நேரத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் வேகமாக இயங்குவது அனைவருக்கும் அனுபவத்தில் இருக்கலாம் என்றாலும் காலப்போக்கில் அதன் வேகத்தை நான் சொல்லி நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டியதில்லை.

என்றாலும் நீங்கள் கணணியை முறையாக பராமரிப்பதன் மூலம் ஆரம்பத்தில் இருந்த அதே வேகத்தில் நீண்ட காலம் பயன்படுத்தலாம். இதற்காக உதவுகின்றது "Synei System Utilities" எனும் மென்பொருள்.

இதெற்கென ஏராளமான மென்பொருள்கள் இருந்தாலும் சிறந்த தனித்துவமான மென்பொருட்களை அறிமுகப்படுத்துவதில் +தகவல் தொழிநுட்பம் கண்ணும் கருத்துமாய் இருக்கும்.

அந்தவகையில் Synei System Utilities எனும் மென்பொருளானது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மென்பொருள் என்பதுடன் எளிமையான இடைமுகத்தை கொண்டுள்ளது. மேலும் இதனை கணனியில் நிறுவவேண்டிய அவசியமில்லை Double Click செய்வதன் மூலம் நேரடியாக பயன்படுத்தலாம் (Portable Application). 

கணனியில் இருக்கும் தேவையற்ற கோப்புக்களை நீக்கி கணனியின் வேகத்தை அதிகரிப்பதுடன் விண்டோஸ் இல் இருக்கும் குறைபாடுகளை நீக்கி கணனிக்கு பாதுகாப்பளிக்கின்றது. 
மேலும் இணையம், இணைய உலாவி, கணினி விளையாட்டுக்கள், போன்ற வற்றினை எவ்வித தங்கு தடையுமின்றி வினைத்திறனாக பயன்படுத்த உதவுவதுடன் மடிக்கணணி எனின் அதன் சக்தியை சேமிக்க வசதிகளையும் கொண்டுள்ளது.

இது தவிர கணணியை தானாக Shutdown செய்வதற்கான வசதியுடன் இன்னும் பல அம்சங்களைக் கொண்டுள்ள இந்த இலவசமான மென்பொருளை தரவிறக்ககீழுள்ள இணைப்பில் செல்லவும்.


  • இதனை Windows XP உட்பட Windows 8 வரை எந்த ஒரு Windows கணணியிலும் பயன்படுத்த முடியும்.
  • இதனை பயன்படுத்த .NET Framework 3.5

குறிப்பு : பெரும்பாலான மென்பொருள்கள் இயங்குவதற்கு Microsoft இன் .NET Framework தேவைப்படும் இது உங்கள் இயங்கு தளத்தில் நிறுவப்பட்டு இல்லையெனின் இதனை கீழுள்ள சுட்டி மூலம் தரவிறக்கி நிறுவிக்கொள்ளவும்.

Download .NET Framework For windows

இலவசமாக 100 GB இணைய சேமிப்பக வசதியை வழங்கும் புதிய சேவை.


இணைய சேமிப்பகத்தின் பயனை இன்று பலரும் அறிந்து வைத்துள்ளனர் குறிப்பட்ட தளத்துக்கு எமது கோப்புக்கள் ஆவணங்களை தரவேற்றுவதன் மூலம் உலகின் எந்த ஒரு மூலையில் இருந்தும் எந்த இரு கணணியை பயன்படுத்தியும் எமது தரவுகளை பெற்றுக்கொள்ள முடிவதோடு இன்னும் பல வகையான அனுகூலங்களை பெற்றுக்கொள்ள முடிகின்றது.


ஆரம்பத்தில் இறுவட்டுக்கள், Flash Drive போன்ற சாதனங்களில் சேமிக்கப்பட்ட தரவுகள் இன்று இணையத்தில் சேமிக்கக்கூடிய சாத்தியப்பாடானது தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட பாரிய மாற்றமே என்றால் அது மிகையாகாது.
"அன்று தொடக்கம் இன்று வரை கணணி சேமிப்பகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்" என்ற பதிவின் மூலம் இதனை நன்கு விளங்கிக்கொள்ளலாம்.

அந்தவகையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட "Mega" இணைய சேமிப்பகம் உட்பட இன்னும் பல இணைய சேமிப்பகங்களை நாம் இங்கு அறிமுகம் செய்திருந்தோம். (Adrive.Norton Zone)


என்றாலும் நாம் இன்று அறிமுகப்படுத்தவிருப்பது "zoolz" எனப்படும் புத்தம்புதிய இணைய சேமிப்பகத்தை பற்றியே யாகும்.

  • இதன் மூலம் எவ்வித வேக வரையறையுமின்றி தரவுகளை தரவேற்றவும் தரவிறக்கவும் முடியும்.

  • நாம் தரவேற்றும் தரவுகளை மிகவும் பாதுகாப்பான முறையில் Encrypts செய்து பாதுகாக்கின்றது.

  • Right-click menu ஊடாக தரவுகளை backup செய்யும் வசதிகளை தருகிறது.

  • Mobile Phone மூலமாக இயக்குவதற்கான Application ஐ தருகின்றது.

  • மேலும் பல சிறப்பம்சங்களுடன் ஆரம்பிக்க பட்டுள்ள இந்த சேவையானது, முதல் 1000000 கணக்குகளுக்கு 100 GB வரையான இலவச இட வசதி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

என்றாலும் இங்கு US, Canada, UK, Australia, Germany, France, Switzerland, Austria, Denmark , Finland, Sweden, Belgium, Ireland, Luxembourg, Netherlands போன்ற நாடுகளிலுள்ள பயனாளர்களுக்கே கணக்குகளை துவங்க முடிகின்றது. என்றாலும் மிக விரைவில் அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்படலாம். 

எமது மின்னஞ்சல் முகவரியை இந்த தளத்தில் பதிந்து வைப்பதன் மூலம் இந்த சேவை எமது நாட்டுக்கு இலவசமாக வழங்கப்படும் போது அதனை Notification ஆக பெற்றுக்கொள்ளலாம்.

இத தளத்துக்கு செல்ல கீழுள்ளஇணைப்பை சுட்டவும்.

புதிய பிரவுசர் அறிமுகம் : பவர் யூசர்களுக்காக விவால்டி

ஒரு பிரவுசரை மாற்ற வேண்டும் என்று நினைத்தாலோ அல்லது புதிதாக மாற்று பிரவுசரை பயன்படுத்தி பார்க்க நினைத்தாலோ அதற்கான காலம் வந்துவிட்டது. விவால்டி Vivaldi எனும் பெயரில் புதிய பிரவுசர் அறிமுகமாகி உள்ளது. பவர் யூசர் என குறிப்பிடப்படும் அதிக அளவில் இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு என்ற அடைமொழியுடன் இந்த பிரவுசர் இணைய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகச்சிறந்த பிரவுசர்களில் ஒன்றாக கொண்டாடப்படும் ஓபரா பிரவுசரின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் சி.இ.ஒ ஜான் வான் டெட்ஸ்னர் தலைமையிலான குழு இந்த புதிய பிரவுசரை உருவாக்கியுள்ளது. பவர் யூசர் எனப்படும் அதிக அளவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் தேவையை மனதில் கொண்டு இந்த பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாக விவால்டி குழு தெரிவித்துள்ளது.
விவால்டியில் இருக்கும் புதிய அம்சங்களாக, இணையத்தில் உலாவும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட ’டேப்’களை திறந்து வைத்துக்கொள்ளும் பழக்கம் கொண்டவர்களுக்கு வசதியாக இந்த டேப்கள் அனைத்தையும் ஒரு தலைப்பின் கீழ் தொகுத்து வைக்கும் வசதி அமைந்துள்ளது. ஆய்வு நோக்கில் இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு இந்த அம்சம் உதவியாக இருக்கும். அதே போல அடிக்கடி பார்க்கும் இணையதளங்களை உடனடியாக பயன்படுத்தும் ஸ்பீடு டயல் வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது.மேலும் இணையத்தை பயன்படுத்தும் போது, பிரவுசரிலெயே அந்த இணையதளங்கள் பற்றி குறிப்பெடுத்து வைக்கும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒரு இணையதளத்தை ஏன் பயன்படுத்தினோம் என்பதை எப்போது வேண்டுமானாலும் நினைவுபடுத்திக் கொள்ளலாம். அதே போல குவிக் கமாண்ட்ஸ் மூலம் பல அம்சங்களை உடனடியாக பயன்படுத்தலாம். இவை எல்லாமே இணையத்தை அதிகம் பயன்படுத்தும் வழக்கம் கொண்டவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரவுசர் இன்னும் ஆரம்ப நிலையில்தான் இருப்பதால் தற்போது தொழில்நுட்ப முன்னோட்ட வடிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் முழுவடிவம் அறிமுகமாக உள்ளது.

கடந்த வருடம்(2014)ல் இணையத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட 25 பாஸ்வோர்டுகள்!

1511072_1572213059657910_1886121871402291257_n
இணையத்தளங்களில் பல்வேறு கணக்குகளை வைத்திருப்பவர்கள் தனது பாஸ்வேர்டை கடினமானதாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இதனை கண்டுகொள்ளாமல் எளிதான பாஸ்வோர்டை பலர் பயன்படுத்திவருகின்றனர். அந்த வகையில், கடந்த வருடம் அதிகமாக பயன்படுத்தப்பட்ட 25 பாஸ்வோர்டை Splash Data நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவை வருமாறு,
1. 123456 (Unchanged)
2. password (Unchanged)
3. 12345 (Up 17)
4. 12345678 (Down 1)
5. qwerty (Down 1)
6. 123456789 (Unchanged)
7. 1234 (Up 9)
8. baseball (New)
9. dragon (New)
10. football (New)
11. 1234567 (Down 4)
12. monkey (Up 5)
13. letmein (Up 1)
14. abc123 (Down 9)
15. 111111 (Down 8)
16.mustang (New)
17. access (New)
18. shadow (Unchanged)
19. master (New)
20. michael (New)
21. superman (New)
22. 696969 (New)
23. 123123 (Down 12)
24. batman (New)
25. trustno1 (Down 1)

Hack என்றால் என்ன?

ஹேக்கிங்கில் (Hack) இருந்து தப்பிப்பது எப்படி?
இணையத்தை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால் “ஹேக்கிங்” (Hack) என்ற வார்த்தை அறியாமல் இருக்க மாட்டீர்கள் அப்படி நீங்கள் இதை தெரிந்து இருக்கவில்லை என்றால் இணையத்தை பயன்படுத்த போதுமான அறிவை நீங்கள் இன்னும் பெறவில்லை என்பதே நிஜம். எனவே ஹேக்கிங் பற்றி தெரியாதவர்களும் தெரிந்தவர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய இடுகை இதுவாகும்.
ஹேக்கிங் என்றால் என்ன?
உங்களை அறியாமல் உங்கள் மூலமாகவே அல்லது உங்களுக்குத் தெரியாமல் உங்கள் மின்னஞ்சல், வங்கி மற்றும் பல இணையக் கணக்குகளின் கடவுச்சொல்லை (Password) திருடுவதே ஹேக்கிங் ஆகும்.
எதற்கு இதை செய்கிறார்கள்?
ஒரு சிலர் இதை பொழுதுபோக்காக செய்கிறார்கள், இன்னும் ஒரு சிலர் தங்களுக்கு பிடிக்காதவர்களின் கணக்கை முடக்க செய்கிறார்கள். ஒரு சிலர் பணத்துக்காக செய்கிறார்கள் அதாவது நீங்கள் பணம் கொடுத்தால் அவர்கள் நீங்கள் கூறும் கணக்கை ஹேக் செய்து கொடுத்து விடுவார்கள். இன்னும் ஒரு சிலர் மற்றவர்களின் வங்கிக்கணக்கை ஆட்டையை போட்டு பட்டை நாமம் சாத்தி விடுவார்கள்.
இதை எவ்வாறு தடுப்பது?
நான் கூறப்போவது உங்களை எச்சரிக்கை படுத்தவே நாம் என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும் கொஞ்சம் ஏமாந்தாலும் நமது கணக்கு முடக்கப்பட்டு விடும். எனவே நான் கூறியவற்றை கூடுமானவரை பின்பற்றப்பாருங்கள்.
1. நீங்கள் கூகிள் மின்னஞ்சல் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் கணக்கில் சென்று உங்கள் மின்னஞ்சல் கணக்கை https முறையில் மாற்றிக்கொள்ளுங்கள் காரணம் இது அதிக பாதுகாப்பான ஒன்றாகும். http பயன்படுத்தினீர்கள் என்றால் உங்கள் கணக்கை எளிதில் முடக்க முடியும். குறிப்பாக நீங்கள் Public Wireless பயன்படுத்தினால். எனவே நீங்கள் முதல் வேலையாக இதை மாற்றி விடுங்கள். மின்னஞ்சல் கணக்கு என்றில்லை வங்கிக்கணக்கு உட்பட எந்த கணக்கில் நுழைந்தாலும் அது https ஆக உள்ளதா என்று உறுதி செய்த பிறகே உள்ளே செல்ல வேண்டும். https உங்கள் தகவல்களை என்க்ரிப்ட் செய்து அனுப்பும்.
2. நீங்கள் எப்போது மின்னஞ்சலை பயன்படுத்த நினைத்தாலும் நீங்களே முகவரியை முழுதும் தட்டச்சு செய்யுங்கள் எடுத்துக்காட்டாகhttps://gmail.com வேறு ஏதாவது சுட்டி (Link) மூலம் தயவு செய்து போகாதீர்கள். எடுத்துக்காட்டாகwww.emaanthavan.com/google.com என்று இருக்கும் smile emoticon திறந்தாலும் கூகிள் மின்னஞ்சல் கணக்கு முகப்பு பக்கம் போலவே இருக்கும். நீங்கள் கூகிள் கணக்கு என்று நினைத்து உங்கள் பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து செல்வீர்கள் ஆனால் உள்ளே ஒன்றும் இருக்காது. நீங்களும் சரி! எதோ பிரச்சனை என்று மறுபடியும் நேரடியாக www.gmail.com என்று அடித்து சென்று விடுவீர்கள் ஆனால் உங்களுக்குத் தெரியாது நீங்கள் இன்னொருவருக்கு உங்கள் கடவுச்சொல்லை தாரை வார்த்து விட்டீர்கள் என்று.
3. உங்கள் கணினியில் Windows இயங்குதளம் (Operating System) பயன்படுத்துகிறீர்கள் என்றால் Windows update மற்றும் Anti Virus update கண்டிப்பாக செய்ய வேண்டும். இதை தானியங்கியாக அமைத்து விட்டீர்கள் என்றால் அதுவே நீங்கள் இணையத்தை இணைத்தவுடன் Update செய்து விடும். நீங்கள் அவ்வப்போது அது சரியாக செயல்படுகிறதா என்பதை மட்டும் கவனித்தால் போதுமானது. இது நீங்கள் பயன்படுத்துகின்ற உலவிக்கும் பொருந்தும்.
4. உங்களுக்கு அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து வரும் மின்னஞ்சலில் உள்ள சுட்டிகளை தயவு செய்து க்ளிக் செய்ய வேண்டாம் இன்னும் சொல்லப்போனால் உங்களுக்கு சந்தேகம் அளிக்கும் எந்த சுட்டியையும் க்ளிக் செய்ய வேண்டாம். இதன் மூலம் உங்கள் தகவல்களை எளிதாக சுருட்ட முடியும்.
5. உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்கள் பற்றி கேட்டு எதுவும் மின்னஞ்சல் வந்தால் நீங்கள் தைரியமாக அதை டெலிட் செய்து விடலாம். எந்த வங்கியும் உங்கள் கணக்கு பற்றிய விவரங்கள் (பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல்) கேட்டு மின்னஞ்சல் செய்யாது. 100% நம்பலாம். உங்கள் மின்னஞ்சல் பயனர் கணக்கு பற்றிய விவரங்களைக் கேட்டு வரும் மின்னஞ்சலும் இதே வகையை சேர்ந்ததாகும்.
6. இலவசமாக கிடைக்கிறது என்று உங்களுக்கு தெரியாத எந்த ஒரு மென்பொருளையும் நிறுவாதீர்கள் அதில் Spyware என்ற உங்கள் தகவல்களை திருடும் மென்பொருளையும் இணைத்து விடுவார்கள். இது தெரியாமல் இலவசம் என்று சந்தோசமாக நிறுவினால் உங்கள் கிரெடிட் கார்ட் எண் உட்பட அனைத்தையும் சுட்டு வேட்டு வைத்து விடுவார்கள். நம்ம தான் இலவசம் என்றால் பினாயிலும் குடிப்போமே! உஷாராக இருங்கள். நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு தேவையற்ற மென் பொருளை நிறுவுவதை தவிர்க்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு நல்லது உங்கள் கணினியின் வேகமும் சிறப்பாக இருக்கும்.
7. Keylogger என்ற ஒரு மென்பொருள் உள்ளது இது மிக மிக அபாயகரமான மென் பொருளாகும். இதன் மூலம் நீங்கள் தட்டச்சு செய்யும் ஒரு எழுத்து விடாமல் அத்தனையையும் நீங்கள் அறியாமல் படிக்க முடியும். எளிமையாக கூறுவதென்றால் சுத்தமாக உங்களை மொட்டை அடிக்கும் மென்பொருளாகும். இது பற்றி சுருக்கமாக கூற முடியாது என்பதால் இது பற்றியும் இதில் இருந்து எவ்வாறு தப்பிப்பது என்பது பற்றியும் தனியாக இடுகை விரைவில் எழுதுகிறேன்.
8. எல்லாவற்றையும் விட மிக ஆபத்தான இடம் என்றால் அது பிரவுசிங் சென்டர் தான். காசு கொடுத்து ஆப்பு வாங்கும் இடம், சொந்த செலவில் சூனியம் வைப்பது ஆகும். இங்கே மேற்க்கூறிய என்னவேண்டும் என்றாலும் நடக்கலாம் அல்லது அனைத்துமே நடக்கலாம். எனவே உங்களின் முக்கியமான கணக்குகளை இதைப்போல பிரவுசிங் சென்டர்களில் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிருங்கள். தவிர்க்க முடியவில்லை என்றால் தயவு செய்து Private Browsing முறையை IE, க்ரோம் (ctrl+shift+N) மற்றும் ஃபயர்ஃபாக்ஸ் ல் பயன்படுத்தவும். இது உங்கள் தகவல்களை எங்கும் சேமிக்காது. ஆனால் Keylogger மென்பொருள் முறையில் உங்கள் தகவல்களை திருட முடியும். பாதுகாப்பே இல்லாமல் இருப்பதற்கு இந்த முறை கொஞ்சம் பரவாயில்லை என்று கூறலாம் அவ்வளவே.
9. உங்கள் சொந்தக் கணினியாகவே இருந்தாலும் உங்கள் கடவுச்சொல்லை சேமித்து வைக்காதீர்கள். எப்போது உள்ளே நுழைந்தாலும் ஒவ்வொரு முறையும் கடவுச்சொல்லை கொடுத்தே செல்லுங்கள் அதுவே பாதுகாப்பானது. உங்கள் உலவியில் உள்ள History,Cookies ஐ சீரான கால இடைவெளியில் நீக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.
10. நீங்கள் என்னதான் அனைத்திலும் பக்காவாக இருந்தாலும் உங்கள் கடவுச்சொல் கஷ்டமானதாக இல்லை என்றால் விரல் சொடுக்கும் நேரத்தில் கண்டு பிடித்து விடுவார்கள். நீங்கள் எவ்வளவு சிறப்பான அல்லது எவ்வளவு கேவலமான கடவுச்சொல்லை வைத்து இருக்கிறீர்கள் என்று பின் வரும் தளங்களில் சென்று அறிந்து கொள்ளுங்கள். மொக்கை கடவுச்சொல்லாக இருந்தால் கையோடு மாற்றி விடுங்கள்.
வலிமையான கடவுச்சொல் அமைப்பது பற்றி தெரிந்துகொள்ள
11. அனைத்து கணக்குகளுக்கும் (Gmail, Yahoo, Hotmail, WordPress) ஒரே கடவுச்சொல்லை வைக்கக்கூடாது அப்படி நீங்கள் வைத்தால் ஒரு கணக்கை ஹேக் செய்தால் உங்கள் அனைத்து கணக்குகளும் உங்கள் கையை விட்டுப்போய் விடும். கூகிள் கணக்கை எடுத்துக்கொண்டால் அதில் மின்னஞ்சல், ப்ளாகர், கூகிள் அனலைசிடிக்ஸ், பிகாசா, காலண்டர், ஃபீட் பர்னர், ரீடர், ஆர்குட், கூகிள் சாட், கூகிள் வாய்ஸ், YouTube, Docs என்று அனைத்தும் காலி ஆகி விடும். ஒரு கடவுச்சொல் ஆனால் நீங்கள் இழப்பது எத்தனை பாருங்கள். இவை இல்லாமல் Yahoo!, Hotmail, WordPress என்று பல கணக்குகள் உள்ளன.
12. உங்களுடைய கணக்கின் கடவுச்சொல்லை யாருக்கும் கொடுக்காதீர்கள் அப்படி அவசியம் கொடுக்க வேண்டி வந்தால் வேலை முடிந்தவுடன் உடனே கடவுச்சொல்லை மாற்றி விடுங்கள் அது எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும் சரி! இந்த விசயத்தில் யாராக இருந்தாலும் நம்ப வேண்டாம் காரணம் நாளை வேறு ஒருவர் ஹேக் செய்தால் கூட உங்கள் நண்பரை சந்தேகப்பட வேண்டி வரும். இது அனாவசிய பிரச்சனைகளை தரலாம் நட்பை முறிக்கலாம்.
மேற்கூறியவை உங்களுக்கு ஓரளவு இணைய பாதுகாப்பை அளிக்கும் இருப்பினும் இதையும் மீறி ஜாக்கிரதையாக இருப்பது உங்கள் கையில் தான் உள்ளது. நம் கணக்கை யாரும் இது வரை முடக்கவில்லை அதனால் நம் கணக்கு பாதுகாப்பாக உள்ளது என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். ஹேக் செய்பவர்கள் உங்கள் கணக்கை குறி வைக்கவில்லை என்பதே உண்மை. ஹேக் செய்பவர்கள் நினைத்தால் உங்களின் சிறு தவறு கூட அவர்களுக்குப்போதும் உங்கள் “கணக்கை” முடித்து விடுவார்கள்