சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன், மனிதன் வியாபாரத்தில் ஈடுபட்ட போது பெருவாரியான வரவு செலவு கணக்குகளை கணக்கீடு செய்வதற்கு சிரமப்பட்டதால் ஒரு இயந்திர கணிப்பொறியின் தேவையை உணர்ந்தான். எனவே, அக்காலக் கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அபேகஸ் (Abacus) என்னும் சாதனம் அன்றைய மனிதனுக்கு பேருதவியாக இருந்தது. இக்கருவி மணிச்சட்டம் என்றும் அழைக்கப்பட்டது. ஒரு செவ்வக சட்டத்தில் வரிசையாக பொருத்தப்பட்ட கம்பிகளில் மணிகள் கோர்க்கப்பட்ட அமைப்பை கொண்டிருந்தது. இக்கருவிதான் 1600 ஆண்டுகளாக மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்தது.
முதல் எந்திர கணிப்பான் கி.பி.1623-ல் வில்ஹெல்ம் சிக்ஹார்டு (Wilhem Schickard) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது கூட்டல், கழித்தல் கணக்குகளை ஆட்டோமேட்டிக்காக கால்குலேட் செய்ய வல்லதாக இருந்தது. மேலும், இது பெருக்கல், வகுத்தல் கணக்குகளை ஓரளவிற்கு கால்குலேட் செய்வதற்கு உதவி புரிந்தது. பின்னர், அதே ஆண்டில் பிளெய்ஸி பாஸ்கல் (Blaise Pascal) என்னும் அறிவியல் அறிஞர் இதே கருவியை புதுவகையில் வடிவமைத்து அறிமுகப்படுத்தினார்.
இதனையடுத்து, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கணிப்பீடு கருவிகளின் குறைபாடுகளை நீக்கி கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணக்கீடுகளை ஆட்டோமேட்டிக்காக கால்குலேட் செய்ய லெபனீஸ் உருளை (Leibniz wheel) என்னும் கருவி 1946 காட்ஃரீடு வில்ஹெல்ம் லெபனீஸ் (Gottried Whilhelm Leibniz) என்ற சயின்டிஸ்ட் கண்டுபிடித்தார்.
கணக்கீட்டுத்துறையின் திருப்பு முனையாக அமைந்த கால கட்டம் 19-ஆம் நூற்றாண்டாகும். 1791 முதல் 1871 வரை வாழ்ந்த கனித மேதை சார்லஸ் பேப்பேஜ் (Charless Babbage) என்பவர் 1833-ல் (Different Engine, Analytical Engine) என்ற இரு கணக்கீட்டு தத்துவங்களை வடிவமைத்தார். இத்தத்துவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட கருவியானது நிராவித்திறனால் இயக்கப்பட்டது. 20-ஆம் நூற்றான்டில் (1940-1945) மின்னனுத்திறனின் வருகைக்குப் பிறகு பேப்பேஜின் மேற்கண்ட தத்துவதுவங்களின் அடிப்படையில் மின்னனுக் கணிப்பொறிகள் அமைக்கப்பட்டன. எனவே, பேப்பேஜ் அவர்கள் கம்ப்யூட்டர்களின் தந்தை (Father of Computers) என்றழைக்கப்படுகிறார்.