பெயர்களை வரிசையாக படித்து தேட வேண்டியிருக்கும். எனவே வெவ்வேறு பயன்பாட்டிற்கான கோப்புகளை வெவ்வேறு உருவ ஐகன்களாக மாற்றியமைத்தால் தேடுவது மிகவும் எளிதாக இருக்கும். ஐகான் மாற்றம் செய்ய வேண்டுமெனில் மாற்றம் செய்யவேண்டிய கோப்பின் மீது கர்சரை வைத்து வலது க்ளிக் செய்து தோன்றும் மெனுவில் ப்ராபர்டிஸ் (properties) மீது கிளிக் செய்யவும். இப்பொழுது கீழே படத்திளிருப்பதை போல் ஒரு விண்டோ திறக்கும். அதில் customize என்னும் கீற்றின் (Tab) மீது கிளிக் செய்யவும்.
மேலும் விண்டோவில் Change Icon எனும் பட்டனை கிளிக் செய்யவும். இப்பொழுது கீழிருப்பதை போல் மேலும் ஒரு விண்டோ திறக்கும். அதில் நிறைய ஐகான்கள் இருப்பதை காணலாம்.
இப்பொழுது மாற்றம் செய்யவிருக்கும் கோப்பின் பயன்பாட்டிற்கு தகுந்த உருவ ஐகானை தேர்வு செய்து இரு வின்ன்டோகளிலும் ஓகே (ok) கொடுத்து வெளியேறவும். அவ்வளவுதான் இனி கோப்பின் உருவம் நீங்கள் தேர்வு செய்ததை போல் மாறியிருக்கும். இவ்வாறு மற்ற நினைக்கும் அனைத்து கோப்புகளின் ஐகான்களையும் மேற்குரியவாறு செய்து மாற்றிக்கொள்ளலாம்.