ஆசிரியர்கள், மாணவர்கள் மாற்று வாசகர்களின் நலன்கருதி புதிய அம்சங்கலுடன் புதிய இணையத்தளமானது விரைவில் வெளியிடப்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். "உங்களுடைய அடைவுக்காக எப்பொழுதும் நாங்கள் "

இணையத்தில் ஏற்படும் பிழைசெய்திகளும் அதன் காரணங்களும்

பொதுவாக இணையத்தில் உலாவும்போது ஏதேனும் ஒரு சில தளங்கள் திறக்கப்படாமல் பிழைசெய்தி காட்டும். அவற்றிற்கான விளக்கங்கள் இதோ  
400 : Bad Request
         உலாவியின் முகவரி  பட்டையில் (address bar) முகவரியை (url) தவறாக தட்டச்சு செய்திருந்தால் 400 : Bad Request பிழை செய்தி காட்டும்.
401 : Unauthorized Request
         நாம் காண நினைக்கும் இணையதளமானது  password கொடுத்து அணுக வேண்டிய நிலை இருக்கும் அல்லது அனுமதியற்ற தளமாக இருக்கும். 
403 : For Bidden
          இனைய  தளங்களில்  சில மறைக்கப்பட்டு இருக்கலாம். எனவே நமது உலாவியில்  இத்தளத்தினை தேட முடியாது. ஆகையால் 403 பிழைசெய்தி காட்டும்.
tamil internet tips


404 : Not Found
         நாம் காண நினைக்கும் தளமானது அழிக்கப்பட்டு இருக்கலாம் அல்லது முகவரி மற்றம் செய்யப்பட்டு இருக்கலாம். அல்லது நாம் தேடிச்செல்லும் முகவரியில் தளம் ஏதும் உருவாக்கப்படாமல் இருக்கலாம்.

503 : Service Unavailable
         ஒரு குறிப்பிட்ட சர்வரில் உள்ள தளத்தை ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிக பயனர்கள் ஒரே நேரத்தில் இத்தளத்தை அணுக முயலும்போது சேவை கிடைக்கவில்லை என்ற பிழைசெய்தி உலாவியால் காட்டப்படும்.