ஆசிரியர்கள், மாணவர்கள் மாற்று வாசகர்களின் நலன்கருதி புதிய அம்சங்கலுடன் புதிய இணையத்தளமானது விரைவில் வெளியிடப்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். "உங்களுடைய அடைவுக்காக எப்பொழுதும் நாங்கள் "

கணினியின் திரையை நகல் எடுக்க (Screenshot)

 கணினியின் திரையை நகல் (screenshot) எடுத்து அதில் திருத்தங்களை மேற்கொண்டு சேமிப்பது (save) எப்படி என்பது பற்றியதுதான் இந்த பதிவு. இதனை பெரும்பாலானோர் அறிந்திருப்பர். இருப்பினும் தெரியாதவர் தொடரவும்.

முதலில் நகல் எடுக்க வேண்டிய பக்கத்தை திறந்துகொள்ளவும்.
பிறகு விசைபலகையிலுள்ள பிரிண்ட் ஸ்க்ரீன் (prt scr) பொத்தானை அழுத்தவும்.
[பிரிண்ட் ஸ்க்ரீன் (prt scr) பொத்தான் f12 க்கு அருகில் இருப்பதை காணலாம். உதவிக்கு கீழுள்ள படத்தில் காணவும்] 

பிறகு Start - All Program - Accessories - Paint வரை சென்று MS Paint Program ஐ திறந்துகொள்ளவும்.

அடுத்து ctrl+p  பொத்தான்களை அழுத்தவும்.
தற்பொழுது நகல் எடுத்த பக்கமானது paint program யினுள் வந்திருப்பதை காணலாம்.

அதில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை முடித்துக்கொண்டு தேவையான இடத்தில் சேமித்துக்கொள்ளவும் (save).

சேமிக்கும்பொழுது Jpeg அல்லது jpg போன்ற படிமங்களில் (format) சேமித்துக்கொண்டால் அதனை போட்டோ ஷாப் மென்பொருளை கொண்டும் திருத்திக்கொள்ளலாம்.